Tuesday, 30 May 2023

நெய்னார் மரைக்காயர் குடும்ப சங்கம உரை

 



அஸ்ஸலாமு அலைக்கும்!

வரலாற்று சிறப்பு மிக்க இந்த அவையில் நம்மை ஒன்றிணைத்த எல்லாம் வல்ல றப்புல் ஆலமீனுக்கு நன்றிகளையும் துதிகளையும் முதலில் உரித்தாக்குகிறேன்.

ஆலுவா டவுன் ஹாலில் நடக்கும் நமது  நெய்னார் மரைக்காயர் குடும்ப சந்திப்பிற்கும் நெய்னார்கள் வரலாறு புத்தக வெளியீட்டிற்கும் என்னை அழைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் நெய்னார்கள் வரலாற்று  நூலாசிரியர் அருமை நண்பர் மன்சூர் நெய்னாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நெய்னார் மரைக்காயர் குடும்ப சங்கமம், நெய்னாமார் வரலாற்று நூல் வெளியீடு -- ஆலுவா

 



Friday, 12 May 2023

சுளுந்தீ

 


பரந்து விரிந்த   மதுரை நிலப்பரப்பில் கன்னிவாடி ஊரை நடு நாயகமாக கொண்டு நிகழும் பெருங்கதை.பதினெட்டாம் நூற்றாண்டின்  மதுரை நாயக்கர் கால ஆட்சியில் உள்ளூர் மக்கள் அதிகாரத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் எவ்வாறு பிரித்து ஒடுக்கப்பட்டார்கள் என்பதை மிக நுட்பமாக பேசும் நூலிது.

Wednesday, 10 May 2023

அதிராம்பட்டினம்

சரவணன் மாணிக்கவாசகத்தின் இலங்கை பயணமும் பல கணக்குகளும்

 


சமீபத்தில் நடைபெற்ற மூவரின் இலங்கை  பயணங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எழுத்தாளர்கள் சாரு, அ.மார்க்ஸ். இன்னொருவர் சரவணன் மாணிக்கவாசகம்.

 ஒவ்வொருவரும் தனிப்பட்ட அழைப்பின் பேரிலும் பொதுவான அழைப்பிலும் சென்று வந்தவர்கள்.

அ.மார்க்ஸ் போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. சாருவின் நாய் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் சரவணன் மாணிக்கவாசகத்தின் வருகை மிகவும் குறிப்பிடத்தக்கது. சுற்றுலாத் தலங்கள், ஆன்மீகத் தலங்கள், கடற்கரை, மலைப்பகுதிகள்,, கிழக்கில் வடக்கிலும் பண்பாட்டு இடங்களோடு வரலாற்றையும் சேர்த்து  எழுதிவந்தார் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விடயம் .

மல்லிப்பட்டினம்