Thursday, 25 August 2022

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் -- தலைமை அலுவலகம், நூல் வண்டி



முஸ்லிம் கலை பண்பாடு தொடர்பான ஆங்கில நூலொன்றை வாங்க அம்பத்தூர் என்சிபிஹெச்( நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) அலுவலகத்திற்கு போகிறேன். நீங்களும் வருகிறீர்களா? என அழைத்தார் சகாவு கொள்ளு நதீம்.

தமிழகத்தின் பதிப்பு வரலாற்றில் அரசு செய்ய வேண்டிய வேலையை தனி நிறுவனமாக நின்று செய்த சாதனைகள் கொண்ட ஒரு நிறுவனமல்லவா! உடனே சம்மதித்தேன்.

Tuesday, 23 August 2022

மூணு மாடி ஊட்டு ஷஃபியுல்லாஹ்

 



‘ பச்சிப்பி ‘ என்றுதான் என்னை அவன் சிறிய வயதில் கூப்பிடுவான். தொண்டையதிர சிரித்துக் கொண்டே அவன் பகடி பண்ணாத ஆளே இல்லை. அவன்தான் மூணு மாடி ஊட்டு ஷஃபியுல்லாஹ்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்தோம். அரைத்தொடைக்கு காக்கி காற்சட்டையணிந்து அவன்  வரும் தேசிய மாணவர் படையிலும் ஒன்றாக கழித்தோம்.எனக்கு பக்கத்து தெருக்காரனும் கூட.

Wednesday, 3 August 2022

மேரி ஆவாஸ் சுனோ (மலையாளத் திரைப்படம்)

 

“உண்மையில் இந்த இரவு நேசத்தால் தோய்ந்திருக்கிறது. ஒவ்வொரு இரவுகளும் எவைகளுகெல்லாம் சாட்சிகளாகி நிற்கின்றன?.  நேசத்தின் விரகத்தின் கரிசனத்தின் காத்திருப்பின் அணைப்பின் கணங்களால் இந்த இரவு நிறைந்திருக்கிறது. “