ஒரு படைப்பு அதன் இலக்கியச் சுவைக்காகவும் அது உண்டாக்கும்
கிளர்விற்காகவும் வாசிக்கப்பதோடு அது பேசும் அரசியலுக்காகவும்தான் மனங்கொள்ளப்படுகின்றது. கிரானடா நாவல் பேசும் அரசியலின் தகிப்பு நம்மை முழுமையாக
தன் வசம் எடுத்துக் கொள்கின்றது. அதன் ஒவ்வொரு சொல்லும் இன்றைய தினத்திற்குள்ளும் அதன் கணத் துகள்களுக்குள்ளும் சொரிகின்றது. சிலுவையின்
இடத்தை காவி அனிச்சையாகவே மாற்றீடு செய்து
கொள்கின்றது. நிகழ்கால இந்தியாவுடன் கிரானடாவின்
பனுவலை இணைத்துப்பார்க்காமல் வாசிப்பதென்பது ஒரு வகையில் கள்ள வாசிப்பில்தான் சேர்த்தி.