Wednesday, 16 March 2022

மும்பை 2022 மார்ச் -- குத்பே கோகன் மொகுதூம் அலீ மாஹிம் ( ரழி ) தர்கா, மாஹிம் கடற்கரை, முஹம்மது அலீ ரோடு, முஸ்லிம் முசாஃபிர்கானா, ஸ்டார் இடம்( ஸ்வஸ்திக் சேம்பர்)


மாஹிம் கடற்கரையில் குத்பே கோகன் அவர்கள் கற்பித்த இடத்தில் சிரு தோரணமுள்ளது. ஒரு நாளின் பாதியில் அவ்விடத்தை கடல் மூடி விடும். 







குத்பே கோகன் மொகுதூம் அலீ மாஹிம் ( ரழி ) தர்கா வளாகம், மாஹிம் காவல்துறையினர் இந்த தர்காவை மிகவும் போற்றுகின்றனர்.

குத்பே கோகன் என்றால் கொங்கணி பகுதியின் நிறை மகான் என்று பொருள்.    ஏராளமான பேர்களை  இஸ்லாத்தின் பக்கம் அழைத்தவர்கள். அல்குர்ஆனின் 114 அத்தியாங்களின் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற திறவு சொல்லுக்கு அத்தனை வகை தனித்த விளக்கங்கள் எழுதியவர்கள்.










கர்நாக் சாலையில் உள்ள முஸ்லிம் முசாஃபிர்கானாவுடன் இணைந்த ஜுமுஆ மஸ்ஜித்










முகம்மது அலீ ரோடு சந்தி


கர்நாக் ரோடு சுவஸ்திக் சேம்பரில் உள்ள காயல்பட்டினம் ஸ்டார் குடும்ப இடம். 1970களில் வளைகுடா வேலைவாய்ப்புகள் திறந்த நேரத்தில் அவ்வாறு வேலை தேடி மும்பை வந்த ஆயிரக்கணக்கான காயல்பட்டின இளைஞர்களுக்கு மாதக்கணக்கில் உண்டியும் உறையுளும் நல்கிய இடம். 



1997 ஆண்டைய கணக்கின் படி ஒரு நாளில் அரபக வேலை தேடி வந்த இளைஞர்களில் சுமார் அறுபத்தைந்து பேர் வரை இங்கு தங்கியுள்ளனர். அதற்கு முன்னர் உள்ள ஆண்டுகளில் உறுதியாக இந்த கணக்கு கூடுதலாகத்தான் இருந்திருக்கும். அவர்களனைவருக்கும் இந்த அம்மியில் அரைத்து உணவு சமைத்துள்ளனர். 


















 

No comments:

Post a Comment