Wednesday, 17 November 2021

பலி கேட்கும் ஆசான்

"

"ஆனால் அவ்வண்ணம் எந்த முன்முடிவுகளும் இல்லாத பல்லாயிரவர் சமூகவலைத்தளங்களுக்கு சென்று சிலகாலம் புழங்கியதுமே சிறுபான்மை மதத்தவர் எல்லாமே மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள், அவர்களால் வேறெந்தவகையிலும் சிந்திக்க முடியாதென்ற உணர்வை அடைவது கண்கூடான நடைமுறை உ“அவங்க மதம் டீனேஜிலேயே கடுமையாக டிரெயினிங் குடுத்திடுது… மதத்தேவைக்காக அவங்க தற்காலிகமா இடதுசாரி ஆதரவாளர்களா ஆகலாம். இடதுசாரியா ஆகிறது அனேகமா நடக்கவே நடக்காது”



அந்த ஒரு வரியையாவது சிறுபான்மையினரில் உள்ள சமநிலையும் ரசனையும் கொண்டவர்கள் அவர்கள் மதம்சார்ந்த வெறியர்கள் பொதுஆளுமைகள் மேல் கட்டவிழ்த்துவிடும் வசைகளின்போது பதிவுசெய்ய வேண்டும். இனிமேலும் அவர்கள் பம்மிக்கொண்டிருந்தால் இழப்பு அவர்களுக்கே உருவாகும். அவர்கள் பேசுவதற்குரிய பொதுக்களங்களே இல்லாமலாகும்.." -- ஜெயமோகன்

---------------------

தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்து வரும் ஜெயமோகனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

நீ அஜ்மீருக்கு போ தொப்பியைப்போடு ' யா காஜா ' என விளி-- எதைச்செய்தாலும் எதைத்தின்றாலும் எங்கு உருண்டாலும் உன் மூளையில் ஊறிக் கோண்டிருக்கும் நஞ்சின் நீலப்படலம் உன் விரல்களின் வழியே சொட்டுவதை ஒருபோதும் உன்னால் நிறுத்தவே இயலாது.

 

அதனால்தான் சொல்கின்றோம்




" நீ

நேற்றும்

ன்றும்

நாளையும்

என்றும்

இலக்கிய சங்கிதான்".

 

ஜெயமோகனின் கடைக்கண் ஆசிக்காக காத்துக் கிடக்கும் அவரது முஸ்லிம் வாசக அடிமைகளுக்கு

ஜெயமோகன் இடும் “அந்த ஒரு வரியையாவது சிறுபான்மையினரில் உள்ள சமநிலையும் ரசனையும் கொண்டவர்கள் அவர்கள் மதம்சார்ந்த வெறியர்கள் பொதுஆளுமைகள் மேல் கட்டவிழ்த்துவிடும் வசைகளின்போது பதிவுசெய்ய வேண்டும். இனிமேலும் அவர்கள் பம்மிக்கொண்டிருந்தால் இழப்பு அவர்களுக்கே உருவாகும். அவர்கள் பேசுவதற்குரிய பொதுக்களங்களே இல்லாமலாகும்.." என்ற விசுவாச நிரூபண கட்டளையை நிறைவேற்றாவிட்டால் ஆசானின் அருள் அவர்களுக்கு இல்லாதொழியுமே?!

இந்த நாளின் ஆகப்பெருங்கவலை இதுதான்

-----------------------

ஜெயமோகனின் முழுப்பதிவையும் வாசிக்க....

https://www.jeyamohan.in/159765/

No comments:

Post a Comment