Sunday 14 November 2021

பருப்பும் துதியும்




இலக்கியவாதிகளும் ஞானிகளுமான அரிஸ்டோஃபேனிஸ், யூபிடிஸ் எனப்படுவோர் கிறிஸ்துவிற்கு முன் கிரேக்கத்தில் வாழ்ந்திருந்தனர்.



அரிஸ்டோஃபெனிஸ் யூபிடிசை விட ஒரு படி மேல். அவர் புத்தரைப்போன்றவர். எள்ளல் இலக்கியத்திற்கு பெயர் பெற்றவர் என்பதோடு அதிகாரத்திற்கு எதிராகவும் நின்றவர்.

ஒரு நாள் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த அரிஸ்டோஃபேனிஸைக் காண யூபிடிஸ் சென்றார். அங்கே அரிஸ்டோஃபேனிஸ் தனது குடிசையில் பருப்பு ஆக்கிக் கொண்டிருந்தார்.

அரிஸ்டோஃபேனிசின் வறிய நிலையை எண்ணி வருந்திய யூபிடிஸ் அவரிடம் இப்படிச் சொன்னார் “ நீங்கள் அரசரை துதிக்க கற்றிருந்தால் இப்படி பருப்பை ஆக்கத் தேவையில்லையே?”

அதற்கு அரிஸ்டோஃபேனிஸ் “ நீங்கள் பருப்பு உண்ணப் பழகியிருந்தால் அரசரை துதிபாட வேண்டிய தேவையிருக்காதே?” என்றாராம்.

- அகில இந்திய வானொலியின் கவரட்டி நிலையத்தில் ஒலிபரப்பான ‘சுபாஷிதம்’( நற்சொல்) நிகழ்ச்சியில் கேட்டதை ஒட்டி எழுதியது.

No comments:

Post a Comment