Sunday 30 May 2021

தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்-- வாசிப்புக்குப்பின்னர்

 

காலச்சுவடு பதிப்பகம் சென்ற வருடம் வெளியிட்ட கிளாசிக் வரிசை நூல்களில் ஒன்றான  தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள் தொகுப்பை நேற்றுதான் நிறைவு செய்தேன்.

 

கதைகளை வாசித்துக் கொண்டிருக்கும்போதும் சரி, வாசித்து நிறையும்போதும் சரி, கதைகளில் உலவும் பாத்திரங்கள் எல்லாம் ஒன்று திரண்டு  பருப்பொருளிடம் நிழல் மீள்வது போல  அவை கதாசிரியனையே அடைகின்றன.

 

கதைகள் நம்மை வெவ்வேறு உணர்வலைகளுக்குள் மூழ்கடிக்கும்போது உடனே அந்த படைப்பாளியின் கரங்களையே பற்றத் தோன்றுகின்றது.  தோப்பிலின் கதைத் தொகுப்பை வாசித்த பிறகு  மனம் தட்டழிந்தது. சிறிது நேரத்தில் எனது வட்ஸப்புக்கு  நண்பரும் கவிஞருமாகிய அமீர் அப்பாஸ் தான் எழுதிய ஒரு கவிதையை அனுப்பியிருந்தார்.   

 

எல்லைகள் அற்ற பயணங்கள்

“… இறந்து விட்ட

ஒருவனிடத்தில்

பெற்றுக்கொண்ட கடனை

அவன் பிள்ளைகளிடம் திருப்பிக்கொடுத்தாலும்

 

அந்தப் புன்னகையின்

மனநிறைவை

அவனின்றி

எப்படி அனுபவிப்பது?

 

 

நினைவுகளால்

பின் தொடரும்

ஒரு மனிதனின்

குரல் கேட்க

வழியற்றுப்போய்

மறுமொழி இல்லாமல்

எப்படி உரையாடுவது?

 

உருவமற்ற

கடவுளோடு கூட

உறவாட முடிகிறது

 

உருவமற்றுப் போன

மனிதனிடத்தில்

உரையாட

அச்சமாக உள்ளது

 

திரும்பி வர இயலாத

தொலைதூரங்களுக்கு

சென்று விட்ட

மனிதனின்

மகத்தான அன்பில்

மீட்க இயலாத

மனப்பிறழ்வு

தோன்றி விடுகின்றது

 

- அமீர் அப்பாஸ்


No comments:

Post a Comment