Sunday, 16 May 2021

குழந்தையகராதி

 துயர்கள் இருளாய் சூழும் வேளைகளில் அந்த கறுஞ்சுழலிலிருந்து நம்மை மீட்பதில் குழந்தைகளை விட வல்லவர்கள் யார்?

என் பெயர்த்தியின் சொல்லகராதி



தண் -- தண்ணீர்
யா யா -- மெத்தைக்கு கூட்டிக் கொண்டு போ
ப்பா -- அப்பா ( தாத்தா )
ஃபூ -- செல்பேசி
பூ-- ஆடு ,மாடு
ப -- பழம்
சூ -- புதை மிதி, பழச்சாறு
அஆ -- உணவு ஊட்டு
நா நா -- வேண்டாம்
நானா -- நான்தான்
டூஜி -- பூச்சி. ( முதலில் பூச்சி எறும்பை ஈஈ என்றவள் தற்சமயம் அதை சொல்வதில்லை )
குக்கு-- குருவி
ஹ்ம்ம் -- பைக்
சீயா -- வெட்கமான செயல்.

ச்சி ச்சி -- பிய்த்து தா
---------------
அவள்தான் சொல் அவள்தான் அகராதி

No comments:

Post a Comment