Friday 25 December 2020

தொப -- பெருங்கதையாடலுக்கெதிரான தமிழ் நாட்டு சிற்பி





நிகழ்ச்சியின் ஓர் இடை வேளையில் நண்பர் அமீர் அப்பாஸ் என்னை பேரா.தொ.பரம சிவம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் காயல்பட்டினம் என்று சொன்னவுடன் உங்கள் ஊரின் மீஸான் கற்கள் ஏராளமான வரலாறுகளை சுமந்து நிற்கின்றதே , அதைப்பற்றி எழுதுங்களேன் என்றார். இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து உரை ஒன்றிற்கு ஏற்பாடு செய்தால் வந்து உரையாற்ற ஆயத்தமாக இருப்பதாகவும் சொன்னார்.
1920 களில் நமது ஊரில் வெளியான கமருஸ்ஸமான் என்ற அரபு மாதாந்திர தமிழ் பத்திரிக்கையின் படிகள் கிடைக்குமா ? எனக் கேட்டார். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை . வெட்கமாக இருந்தது .விசாரித்து சொல்கின்றேன் என சமாளித்து விட்டேன்."
இப்படித்தான் மானிடவியலாளரும் பேராசிரியரும் ஆய்வாளருமான தொ.பரமசிவம் பற்றிய அறிமுகம் கிடைத்தது.
இந்த சந்திப்பு நடந்தது ஏழு வருடங்களுக்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பூவுலகின் நண்பர்கள் நடத்திய ' விதையிலிருந்தே மரம் " பயிற்சிப்பட்டறையில்தான் நடந்தது.
ஓயாமல் புகைத்துக் கொண்டிருந்த தொ.ப. அவர்கள் நிகழ்வின் இடைவேளையில் " உங்களூர் வாவு வஜீஹா கல்லூரிக்கான அனுமதி தொடர்பான ஆய்விற்காக காயல்பட்டினம் வந்துள்ளேன் என்றார்.
புகை, கட்டுக்கடங்காத நீரிழிவு அவரது கால்களைப் பாதிக்கத்தொடங்கியபோது , ஆர்.ஆர்.சீனிவாசன் என்னிடம் சொன்னார் " அவரின் உடல் நிலை சீரில்லை. விரைந்து அவரைக் கொண்டு உங்களூரில் ஒரு நிகழ்ச்சியை நடத்துங்கள் " என்றார்.
அதற்கான வாய்ப்பு வாய்க்காமலே அவர் நம்மை விட்டு கடந்து விட்டார்.
தொ.ப. தமிழ்நாட்டிற்கு எந்தளவு முக்கியமானவர் என்பதற்கு கூடுதல் சான்றுகள் எதுவும் தேவையில்லை.
ஆர்.எஸ்.எஸ் & பார்ப்பனீயத்தின் இலக்கிய அடியாள் ஜெயமோகன், தனது தொபசி பற்றிய அஞ்சலிக் குறிப்பில் " அவர் வெறும் ஊகங்களைத்தான் எழுதினார் " எனப்பதிந்துள்ளார்.
தந்தை பெரியாரின் சூத்திரப்படி இந்த வரி ஒன்றே போதும் தொப எல்லா வகையிலும் கொண்டாடப்படுவதற்கு.
நீங்கள் தெளிவாகத்தான் பாதை போட்டுள்ளீர்கள்.
அதனால் மனப்பாரம் எதுவுமின்றி செல்லுங்கள் தொப







No comments:

Post a Comment