Friday 25 December 2020

இயக்குனர் நரணிப்புழா ஷா நவாஸ் -- நினைவேந்தல்






" சூஃபியும் சுஜாதயும் " படத்தில் மாய உலகில் மயங்கிக் கிடக்கும்போது இலங்கை நண்பர் இன்ஸாஃப் ஸலாஹுத்தீனின் அழைப்பொன்று வந்தது.


இயக்குனர் நாரணிப்புழா ஷா நவாஸை நேர்காண வேண்டும் என்றார். மொழித்தடை இருந்ததால் நேர்காணலை நிறைவு செய்ய பல வாரங்கள் ஆகின.

நாரணிப்புழா ஷா நவாஸ் -- நேர்காணல்


நேர்காணலுக்காக வேண்டி ஷா நவாஸுடன்  தொலைபேசியில் உரையாடும்போது தான் அடுத்தக்கதை விவாதமொன்றிற்காக ஆதிவாசிகளின் அடப்பாடியில் தங்கியிருப்பதாக சொன்னார்.


அந்த வேலை நெருக்கடிகளிலும் திரைப்படம் தொடர்பான எனது விமர்னங்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தேன். அவர் சொன்ன மறுமொழிகள் விவாதத்திற்குரியவைகள்தான் என்றாலும் அவரை எனக்கான ஒரு மனிதனாக கலைஞனாகவே உணர்ந்தேன்.


வரலாற்றாய்வாளரும் ஆவணப்பட இயக்குனருமான நண்பர் கோம்பை அன்வர் அவர்கள், ஷா நவாஸுடன் ஓர் இணையவழி உரையாடல் நடத்த விரும்பினார். ஆனால் அதுவும் மொழி சிக்கலினால் நடைபெறவில்லை.


 நண்பர்களுடன் காலபந்து ஆடிக் கொண்டிருந்த இயக்குனர் நாரணிப்புழா ஷா நவாஸுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. அங்கிருந்தே நேரடியாக விடைபெற்று விட்டார்.






No comments:

Post a Comment