Thursday 10 December 2020

ஒரு சொல் வாயில்

 

வெளியூர் திருமணமொன்றிற்காக சென்று கொண்டிருந்தேன். பேருந்தின் இருக்கையில் என்னருகில் அமர்ந்து பயணித்தவர் ஒரு நகரப்பேருந்து ஓட்டுனர். விடுமுறையில் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு செல்கின்றார். வயது முப்பத்தைந்து இருக்கும். ராணுவ வீரனுக்கான தோற்றம். தேவர் சமூகத்தவர்.

 

மெல்ல பேச்சு தொடங்கியது.

 

“ டிரைவர் பொழப்பு நாய் பொழப்பு சார்”

 

“ ஏன் என்னாச்சு?”

 

“ வர்ற வருமானத்துல பாதி மருத்துவத்துக்குத்தான் செலவழிக்கணும். டியூட்டினால ராத்தூக்கம் பாழாப்போகுது. இதுவரைக்கும் மூணு தடவ மூல ஆப்பரேஷன் செஞ்சுட்டேன்”

 

நான் சில பரிகாரங்களை பரிந்துரைத்தேன்.

 

“ சார் நா இப்போ அதத்தான் கடைப்பிடிக்கிறேன். ஊருக்கு போறதோட ஒரு மாசத்துக்குள்ள செக்கெண்ணெய் வாங்கீட்டு வந்துடுவேன். இத ஃபாலோ பண்றதால மூணு வருஷமா பிரச்னயில்ல”

 

“ சொந்த ஊருக்கு மாறிப்போலாமே?” என்றதற்கு

 

“ போலாம் சார். ஒன்றரை லட்சம் ரூவாய் லஞ்சம் கொடுக்கணும். என்னோட ஜாயின் பண்ண ஆள்கல்லாம் அவங்க அவங்க சொந்த ஊருக்கு போய்ட்டாங்க. நான் மட்டும்தான் மிச்சம்”

 

“ ஏன் காசு பிரச்னயா?”

 

“ அதுலாம் இல்ல சார். எங்களுக்கு கல்யாணமாயி பத்து வருஷமாச்சு. கொழந்த இல்ல. ஊர் பக்கம் போனா பாக்குறங்கவல்லாம்  கொழந்த இல்லியா இல்லியான்டு கேக்குறாங்க. மன நிம்மதி இல்ல. அதுனாலத்தான் நான் மனைவியோட இங்க தங்கிட்டேன். மாசம் ஒரு தடவ அப்பா அம்மாவ போய் பாத்துட்டு பொசுக்குனு ஓடி வந்துருவேன்”

 

அவருக்காக பிரார்த்தித்து ஆறுதலும் சொன்னேன்.

 

திருமண வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என்னைப்போலவே வெளியூர் விருந்தினர் ஒருவரும்  வந்திருந்தார். அவர் ஒரு பேராசிரியை. எனக்கு வேண்டியவரும் கூட.

 

பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே வருகையில் திருமண வீட்டின் சடங்கு சாங்கியங்களைப்பற்றி பேச்சு வந்தது. பேராசிரியை பிறப்பால் ஹிந்து. தற்சமயம் நாத்திகராக இருப்பவர்.

 

பிள்ளைப்பேறற்றவர்கள், கணவனை இழந்தோர் ஆகியோரை திருமண வீட்டில் ஒதுக்குவதில்லை. இன்னும் சொல்லப்போனால் கணவனை இழந்த முதிய பெண்களின் ஆசியுடன்தான் முஸ்லிம் இல்லங்களில் திருமண நிகழ்வுகளே தொடங்கும். மொய், அன்பளிப்பு நெருக்கடிகள் இல்லை. கொடுத்தால் உண்டு. கொடுக்காவிட்டால் இல்லை.

 

“அப்படியா”?

 

“ அதெல்லாம் சரி> ஸுன்னத்(கத்னா) விடுவது கொடூரமாக தெரிகின்றதே?”

 

"இயற்கை மரபுகள் ஐந்தாகும். ஆண் குறியின் முன் தோலை  நீக்குதல்( கத்னா) ,  பிறப்புறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை பயன்படுத்தல், மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

“ மேலும் விளக்கத்திற்கும் கத்னாவின் நன்மைகாய்ப்பற்றி அறியவும்  நீங்கள் இணைய தளத்தில் போய் CIRCUMCISION என்ற தலைப்பில் தேடுங்கள்.

 

“ இது போல அன்றாட வாழ்க்கையின் ஓட்டங்களும் சக மனிதர்களும் உண்டாக்கும் கற்பிதங்களிலிருந்தும் மூட நம்பிக்கைகளிலிருந்தும் அவை ஏற்படுத்தும் அக புற நெருக்கடிகளிலிருந்தும் இஸ்லாம் நம்மை விடுவிக்கின்றது”

 

“ நல்ல விஷயம். இதை எல்லோருமே அனுபவிக்க இயலுமா?”

 

  நீங்கள் ஒவ்வொரு விஷயமாக தேடிப்பார்த்து பின்பற்ற வேண்டியதில்லை. அலைந்து சிரமப்பட வேண்டியதில்லை. கலிமா என்ற வாயிலின் வழியாக இந்த மாபெரும் உலகிற்குள் நீங்கள் நுழைந்து கொள்ளலாம்.”

 

பேராசிரியை புன்னகைத்தார்,

 

“வெளியில் பெரிய பெரிய விஷயங்களாக பெருங்கோட்பாடுகளாக பார்க்கப்படுபவை இஸ்லாத்திற்குள் எளிய அன்றாட நிகழ்வுகளாக உள்லன” என தொழுகை நோன்பு ஜக்காத் ஆகியவற்றை பற்றி சுருக்கமாக அவருக்கு சொன்னேன்.

 

நல்லதொரு உரையாடல் என அவர் எனக்கு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment