Monday, 22 June 2020

எறும்பின் நினைவு





  இன்னாங்கோ அவசர அவசரமா பசியாறக் கொண்டா கொண்டான்டு கால்ல வென்னி ஊத்திட்டு ஹயாத்த வாங்கினியளே . இங்க வந்து பாருங்கோ தட்ட முழுசா எறும்பு ஆயுது “





“ அடி இதுக்காடி இவ்ளோ சத்தம். எறும்புதானே உடு “


  ஒன்னு ரண்டுன்டா பரவாயில்லீங்கோ படை படையாலோ ஈக்குது “


“ சரி. இப்போ ஒன்னும் கெட்டுப்போயிடல “


“ நீங்க திர்னவேலி பஸ்ஸ புடிக்கனுண்டு சொன்னியோ. நேரமில்லியங்கோ ஒங்களுக்கு வேற பசாறு செஞ்சு தாறதுக்கு”


“ கொஞ்சம் அமைதியா ஈக்கிறியா. வேற பசாறுலாம் வாணாம். எறும்போட நான் பேசிக்கிறன்”


மனைவி கோபம் கலந்த குழப்பத்துடன் என்னை பார்த்தாள்.


பசியாறு தட்டை கையிலெடுத்தேன். எறும்பின் நடமாட்டத்தை குலைக்காமல் அப்படியே கவளத்தோடு கவளமாக உள்ளே தள்ளினேன்.


“சீ சீ துப்புரவு கெட்ட மனுசன். எறும்போட திங்கிறியளே “



“ நீ அப்புடி சொல்லாதே . எறும்புட நெலமயிலிருந்து நெனச்சு பாரு . “ ஆஹா நமக்கு  நெய் களி கிடச்சுட்டுன்டு சொல்லி தட்டுல ஏறும்போது அது நெனச்சிக்குமா தன் கத முடியுண்டு. ? “



“ நாத்தம் புடிச்ச மனுசன் எறும்ப தின்டுட்டு தத்துவம் வேற பேசுறியோ “ என்றவாறே இடத்தை விட்டகன்றாள்.



அசைவ இனிப்பு கேப்பைக்களி நன்றாகத்தான் இருந்தது.

No comments:

Post a Comment