Saturday, 23 May 2020

அண்டை கொக்கார்






சுபஹ் தொழுகைக்கு பின்னரான உலாவிற்காக, இருள் முழுவதுமாக கவிழ்ந்திருக்கும்போதே மாடிக்கு சென்று விடுவதுண்டு.. நான் உலாவத்தொடங்கி சிறிது நேரத்தில் காக்கைகள் கரைதலை அரை வாசியாக்கி, அந்த அரைக்கரைதலை மெல்ல இருள் தொகைக்குள் விட்டு,   வெளியிறங்கலாமா? என வெள்ளோட்டம் பார்க்கும்.

Friday, 22 May 2020

விடைபெறும் ரமழானின்(2020) இறுதி வெள்ளி ( ஜுமுஅத்துல் விதா )










ஜமாஅத் தொழுகையில்லை, ஜுமுஆ இல்லை தராவீஹ் இல்லை இஃப்தார் இல்லை குர்ஆன் வகுப்புக்கள் இல்லை கஞ்சி இல்லை நள்ளிரவு கடல் தீர கிடப்பில்லை பரந்தளவிலான ஈதல் இல்லை  இரவு நேர விளக்கலங்காரங்கள் இல்லை பரபரக்கும் அங்காடி இல்லை புத்தாடையில்லை பெருநாள் தொழுகை இல்லை முக அகங்கள் கண்டு முட்டும் கடற்கரையின் அந்திப்பொழுதுகள் இல்லை.


இது போன்றதொரு ரமழானை எங்கள் வாழ்நாளில் நாங்கள் சந்தித்ததேயில்லை என எல்லா வயதுப்பிரிவினரும் அங்கலாய்க்கின்றனர்.


கருணை நீக்கம் செய்யப்பட்ட  பணி முடக்கின் வழியாக   எம் சமூக பண்பாட்டு  நிகழ்வுகளை கொண்டாட்டங்களை  முடக்கியிருக்கலாம். இல்லைகளினனால் நிரம்பிய கலன்களை எங்களுக்கு கையளித்திருக்கலாம். ஆனால் புனித ரமழானின் ஆன்ம உள்ளீடை யாராலும் பறிக்கவியலாது.


“ நீங்கள் தோட்டத்தின் அனைத்து மலர்களையும் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்கவியலாது – பாப்லோ நெரூதா.


போய் வா ரமழான்!


வசந்தத்தை மலர்கள் வரவேற்கத்தான் போகின்றன இன்ஷா அல்லாஹ்!!!

Wednesday, 13 May 2020

ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள்?-- ஓரான் பாமுக்







இலக்கியத்திற்கான 2006 ஆம் ஆண்டின் நோபல் பரிசை வென்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் விருது ஏற்புரையின் ஒரு பகுதி

“ எங்களிடம்  அடிக்கடி கேட்கப்படும் அபிமான கேள்வி:

 ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள்?

Monday, 4 May 2020

பெற்றோர் நினைவு

42 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட நிழற் படம். நான், வாப்பா,  தம்பி, உம்மா.மே ஒன்றில்  வாப்பாவின் நினைவு தினம். ரமலான் 9-இல்  உம்மாவின் நினைவு தினம்.முள் மரத்தில் சிக்கிய காற்றாடி போல் இருக்கிறது மனது