Friday 22 May 2020

விடைபெறும் ரமழானின்(2020) இறுதி வெள்ளி ( ஜுமுஅத்துல் விதா )










ஜமாஅத் தொழுகையில்லை, ஜுமுஆ இல்லை தராவீஹ் இல்லை இஃப்தார் இல்லை குர்ஆன் வகுப்புக்கள் இல்லை கஞ்சி இல்லை நள்ளிரவு கடல் தீர கிடப்பில்லை பரந்தளவிலான ஈதல் இல்லை  இரவு நேர விளக்கலங்காரங்கள் இல்லை பரபரக்கும் அங்காடி இல்லை புத்தாடையில்லை பெருநாள் தொழுகை இல்லை முக அகங்கள் கண்டு முட்டும் கடற்கரையின் அந்திப்பொழுதுகள் இல்லை.


இது போன்றதொரு ரமழானை எங்கள் வாழ்நாளில் நாங்கள் சந்தித்ததேயில்லை என எல்லா வயதுப்பிரிவினரும் அங்கலாய்க்கின்றனர்.


கருணை நீக்கம் செய்யப்பட்ட  பணி முடக்கின் வழியாக   எம் சமூக பண்பாட்டு  நிகழ்வுகளை கொண்டாட்டங்களை  முடக்கியிருக்கலாம். இல்லைகளினனால் நிரம்பிய கலன்களை எங்களுக்கு கையளித்திருக்கலாம். ஆனால் புனித ரமழானின் ஆன்ம உள்ளீடை யாராலும் பறிக்கவியலாது.


“ நீங்கள் தோட்டத்தின் அனைத்து மலர்களையும் பறிக்கலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்கவியலாது – பாப்லோ நெரூதா.


போய் வா ரமழான்!


வசந்தத்தை மலர்கள் வரவேற்கத்தான் போகின்றன இன்ஷா அல்லாஹ்!!!

No comments:

Post a Comment