Sunday 16 February 2020

கூனன் தோப்பு





எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களை சந்திக்கும்போதும் அவரது ஒவ்வொரு நாவல்களையும் எனக்கு பரிசளிப்பார்.அப்படியான அன்பின் கனியாக எனக்கு கிடைத்த கூனன் தோப்பு ( அடையாளம் வெளியீடு)   புதினத்தை நேற்றிரவுதான் வாசித்து முடித்தேன்.
எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்களை சந்திக்கும்போதும்
அவரது ஒவ்வொரு நாவல்களையும் எனக்கு பரிசளிப்பார்.அப்படியான அன்பின் கனியாக எனக்கு கிடைத்த கூனன் தோப்பு ( அடையாளம் வெளியீடு)   புதினத்தை நேற்றிரவுதான் வாசித்து முடித்தேன்.

அவரின் வாலிப கால மனத்தில் விழுந்து ஒட்டிய குருதிக்கரைதான் இந்த நாவல். மனிதத்தின் அழிவுகளைக் கண்டு வெம்பிய  நல் மனத்தின் எழுத்து சாட்சி " கூனன் தோப்பு ". மனித மனத்தின் கரிய இடைவழிகளுக்குள்  நெளியும் நச்சரவங்களை கைகாட்டும் கூரிய நேர்மை.

இடியப்பத்தின் பிரி நூல் போல இழைந்து கிடக்கும் இரு சமூகங்கள் ஒருவரையொருவர் எதிரிகளாக கருதினால் யாருக்குமே நிம்மதியின் தொட்டிலில் தாலாட்டு கேட்டு மயங்கவியலாது.

1970களில் திருவனந்தபுரம் மாவட்டத்தின் தீரப்பகுதியான பூவாற்றில் நடந்த மீனவர் முஸ்லிம் மோதலின் குறுக்கு வெட்டு தோற்றம். அக்கினி பிழம்பின் தகிக்கும் மையத்தில் நின்று பேசும் கதை.

இரு சமூக போக்கிலிகளின் இழுப்பிற்கு கைப்பொம்மைகள் போல ஆடித்தீர்த்த சமூகங்களின் வெறியாட்டம் வெந்து தணிந்த  போது தங்களின்  கால்களினடியில் அவர்கள் கண்டது  நீறிக்கிடந்த தங்களின் சொந்த சாம்பல் குவியலைத்தான்.

தேசத்தை சதுரங்கப்பலகையாக்கி ஒவ்வொரு சமூகத்தையும் ஒருவரை மற்றவருக்கெதிராய் பிரித்து நிறுத்தும் வெறுப்பு  சூத்திரக்கயிறுகளின் ஆட்டக்காலமிது.

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment