சமூகத்திற்குள் பொருந்த இயலாத உதிரி மனிதர்களின் கதை இது. கட்டற்ற வாழ்க்கைக்குள்
மிதக்கும் இந்த மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் கலை, களவு, காமம் இம்மூன்றும் ஒன்றையொன்று
மீற முயற்சித்துக் கொண்டே இருக்கின்றன. கலை வாழ்விற்கான கொஞ்ச நஞ்ச சமூக உத்திரவாதமும்
நசிந்து போக எதிர்மறைக்குள் அமிழ்ந்து போகும் வாழ்வு.
கண்டங்கள் அனைத்தையும் தாண்டும் பெரு நீர் போல வாழ்க்கையானது தனது எல்லா
அழகு அழகின்மையுடன் நடனமாடியவாறே இழைகிறது.
கிராஸிங்க் பிரிட்ஜஸ் -- அருணாச்சல பிரதேசத்தின் மிகச்சிறு இனக்குழுவினர்
பேசும் மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
மும்பையின் தகவல் தொழில் நுட்பத்துறையில் கை நிறைய ஊதியத்துடன் கூடிய
வேலை. பல வருட பணிக்குப் பிறகு விடுமுறையில் பிறந்த குக்கிராமத்திற்கு வருகிறான்.
பேரப்பிள்ளைகளை கண்டு விட துடிக்கத்தான் செய்கின்றது. ஆனால் தற்சமயம்
சொந்த மக்களின் முகங்களையே பார்க்க முடிவதில்லை என்ற அங்கலாய்ப்புடன் அன்னிய நிலத்தில்
பணி புரிவதன் மீதான தங்களது ஒவ்வாமையையும் தங்களது
முதிய வயதையும் சொல்லி அவனை பிறந்த ஊரிலேயே தங்கி விவசாயத்தையும் பார்க்கும்படி கோருகின்றனர் அவனது பெற்றோர் .
முதிய வயதையும் சொல்லி அவனை பிறந்த ஊரிலேயே தங்கி விவசாயத்தையும் பார்க்கும்படி கோருகின்றனர் அவனது பெற்றோர் .
ஒற்றைத்தடத்தில் ஒரே மாதிரியான நிரலுடன் மந்தமாக ஊர்ந்து செல்லும் குக்கிராம
வாழ்க்கைக்குள் எப்படி பொருந்த முடியும்? என்ற கேள்வியும் மும்பையின் பெரு நகர வாழ்க்கைக்குள்
மீண்டுவிடத்துடிக்கும் அகப்பதட்டமுமாக அவனுக்குள் இழுபறி நிலை.
திடீரென ஒரு நாள், ஆட்குறைப்பில் தனது வேலை பறி போய் விட்டது என்ற தகவல்
இவனுக்கு வந்து சேர்கின்றது.
மும்பை என்ற பெருங்கனவிற்குள் மீளத்துடிக்கும் அவனுக்கு அதன் சாத்தியம்
தொலைவாகப்படவே மெல்ல தனது பிறந்த மண் மீது அவனது அகம் குவிகின்றது.
சொந்த மண்ணின் தொன்மங்கள், தேவைகள், நிலம். நதி, மலை, பனி, மாணவர்கள்,
இறப்பு, நட்பு இவற்றுடன் கிராமத்தின் உள்ளிசைக்குள் மீள்கின்றான். புள்ளியிடம் திரும்பி
வரும் கோட்டைப்போல ஒரு மீளுதல். அருணாச்சல் பிரதேசத்தின் படர் திரை பனியின் மென்மையைப்போல
பதமாக நகரும் கதை.
No comments:
Post a Comment