Sunday, 8 December 2019

ஒன்றரை நாள் பயணக்குறிப்பு






1. நாகர்கோவில் சக்கரவர்த்தி திரையரங்கில் பத்மாவத் படம் பார்த்தோம்.

முகேஷ் அம்பானியின் நிறுவனம் தயாரித்த படம். இப்போது பாதி சங்கதி விளங்கியிருக்கும் என நினைக்கின்றேன்.

பாஸிஸகுஞ்சுகளே நெளியும் வண்ணம் எடுத்திருக்கின்றனர்

மன்னராட்சியில் ஏதடா ஹிந்து முஸ்லிம் பிரிவினை. மிக அரிதினும் அரிதான எடுத்துக்காட்டுகளைத் தவிர ஏனைய மன்னராட்சி அனைத்தும் கொடுங்கோன்மையின் செயல் வடிவமே.

இந்த படத்திற்கு எதிர்ப்பு உப்புமா எல்லாம் வசூலை கூட்டுவதற்கான சந்தை உத்தியே. அம்பானி காசையள்ளி விட்டார். பாவம் . படம் பார்த்த கண்கள் ஓட்டு போடுமா ? காத்திருக்கிறது பா.ஜ.க.

2. முட்டம் கடற்கரை சென்றோம். ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம் என எழுதியிருந்தது. உள்ளே பட சடடத்திற்குள் கருப்புக் கண்ணாடி போட்டுக் கலைஞர் மாதிரி தோற்றமளிக்க முயற்சித்தவாறே தொங்கிக் கொண்டிருந்தார் ஜேப்பியார்.


கணவா , இறால் என அம்பாரம் அம்பாரமாக மீன் குவியல் விற்பனையாகிக் கொண்டிருந்தது. . அருகிலேயே வாரி வழித்தெடுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்த ஏராளமான மீன் குஞ்சுகள்.

3. காளி கேசம் அருவி. மேலிருந்தும் நீருக்கடியிலிருந்து பார்த்தாலும் மாறாத தெள்ளிய சுவை நீர். நிம்மதியாக நின்று முங்கி குளித்து குப்பிகளிலும் நீரை நிரப்பிக் கொண்டோம். அருகிலுள்ள காணி பழங்குடியினருக்கு சொந்தமான கோவிலிருந்து "ற" வை அழுத்தந்திருத்தமாக உச்சரிக்கும் கன்னியாகுமரி மாவட்ட வில்லிசைக் கலைஞரின் வில்லுப்பாட்டு.

4. தமிழ் நிலத்தில் மலையாள உரை. வெள்ளிக்கிழமை குத்பா தொழுகைக்காக ஒரு பள்ளிவாசலில் நிறுத்தினோம். ரப்பர் மரத் தொழிலாளிகள் மலையாளத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தங்கள் வழிபாட்டிற்காக கட்டியுள்ளனர். தவறான வழியில் ஈட்டப்பட்ட உணவின் விபரீதங்களை பற்றி ஆலிம் பேசிக் கொண்டிருந்தார்.

5. திட்டுவிளையில் நல்ல மீன் சாப்பாடு. நாகர்கோவில் மணிமேடைக்கருகில் கடலையெண்ணையில் பொறிக்கப்பட்ட நேந்திரம்பழ வறுவல்,& உப்பேறி , வேப்பமூடு சந்திப்பில் பால் மணத்துடன் கூடிய முந்திரிபருப்புமாக பயணம் நிறைந்தது.

No comments:

Post a Comment