என்னிடம் ஏற்கனவே
இருந்த சோனி நிறுவனத்தின் வானொலிப்பேழை பழுதடைந்து விட்டது. 21 வருடங்களுக்கும் மேலாக
என்னிடம் இருந்தது. என் காக்கா சவூதியிலிருந்து வரும்போது வாப்பாவிற்கு ,அன்பளிப்பாக
கொடுத்தது. வாப்பாவின் கால உறைவிற்கு பின்னர் என்னிடம் வந்து சேர்ந்தது.
கொஞ்ச நாட்களாய்
இணையவழி வானொலிச் சேவைகளை நான் தினசரி கேட்கிறேன். ஆனால் அதற்கான முன் ஆயத்தங்களாக
கணினி,ஒலிபெருக்கி,இணைய சேவை என மூன்றும் .கூடுதலாகத் தேவைப்படுகின்றது.
எனவே நினைத்த பொழுது
கேட்க வசதியாக பிலிப்ஸ் நிறுவனத்தின் வானொலிப்பேழையை வாங்கி விட்டேன். நேரடி மின் இணைப்பு,
உள்ளக மின்னேற்ற வசதி ( சார்ஜிங்) , மின் கல வசதி ( பேட்டரி ) என மூன்று வாய்ப்புகள்
உள்ளன.
இப்போது என் தலையணைக்கருகில்,
மேசைப்புறத்தே , சமையல் கட்டில் என கூடவே இருக்கிறது வானொலிப் பேழை.
வானொலிப்பேழை,
மின்னலைவு நீக்கி ( எலிமினேட்டர் ) ஆகியவற்றை சேர்த்து 1600/= ரூபாய்கள்தான். ஆனால்
ஜி.எஸ்.டி சேர்த்த பிறகு 1900/= ரூபாய்கள்.
அட்டையில் , சுனோ
மன் கீ கீத் ( கேளு மனதின் பாடலை ) என எழுதியிருந்தது.
பிலிப்ஸ்காரர்களுக்கு
மூளையில்லை. மன் கீ பாத் என போட்டிருந்தால் மோதியின் அரசு வானொலியை ஒரு வேளை இலவசமாகக்
கூட கொடுத்திருக்கும்.
No comments:
Post a Comment