ஆக்கி வறட்டிய மாட்டிறைச்சி, நல்லெண்ணெய் , வற்றல்
தாளிப்பில் எலுமிச்சை சோறு, தட்டடுக்கு கோதுமை ரொட்டி என அனைத்தையும் பொட்டலமாக கட்டி
தண்ணிர் குடுவையுடன் ஒரு பையில் வைத்தாகி விட்டது. ஆம்! ஒன்றரை நாட்களுக்கும் மேற்பட்ட
வெளியூர் பயணத்திற்கான இருவருக்கான கட்டமுது. அத்துடன் பயணத்திற்கான அனைத்தும் ஆயத்தமாக
பொதிகளில் காத்து நிற்கின்றன.
ஒரு நாள் முன்னதாகவே தத்கல்லிலும் உறுதி செய்யப்பட்டபயணச்சீட்டை
முகவர் மூலம் போட்டாகிவிட்டது. பயணக்கூட்டாளிகளில் ஒருவர் மற்றொருவரை செல்பேசியில்
அழைத்து மச்சான்! ஒருவேளை குளிர்சாதன வசதிக்கு நமது பயணச்சீட்டை மேம்படுத்தியிருக்க
வாய்ப்புண்டு. சோதித்து பாருங்கள் என்றார். ஆமா அமா இருக்க வாய்ப்பிருக்கு என்ற மற்றவர்
, மெதுவாக பயணச்சீட்டின் தகவல் வந்த வட்ஸப்பை கண்களை சுருக்கி பார்க்கின்றார்.
பார்த்தவருக்கு அதிர்ச்சி.
பெரியதாக ஒன்றுமில்லை. சென்னையிலிருந்து எடுப்பதற்கு
மாற்றமாக இவர்கள் போய் சேர வேண்டிய ஊரிலிருந்து புறப்படுவதாக முகவர் தவறாக பயணச்சீட்டை
எடுத்திருக்கின்றார்
No comments:
Post a Comment