Saturday, 14 December 2019

அலைந்த தெரு






தளிர் விரல்களை
சப்பிக்கொண்டு்
அலைந்தாடும்
இரு
கன்றிய
பாதங்களுடன்
தெருவின்
இரு
முனைகளுக்கும்

தள்ளு வண்டியில்
அலைந்து
கொண்டிருந்தது
குழந்தை
தள்ளு வண்டியில்
குழந்தையின்
தலைக்கு மேல்
வட்ட வடிவ குடை
ஒன்று இருந்தது.
சற்று நேரத்தில்
குழந்தையும்
குழந்தையின்
வண்டியும்
அசையாமல்
அப்படியே
உறைந்து
நிற்க
தெரு
அலையத்
தொடங்கி விட்டது.
மேற்கு வானம்
சிவக்க
காற்று
வீச
நான்
என்
வீட்டுப்படியில்
அமர்ந்து
இரண்டு
அலைச்சல்களையும்
வெறுமனே
வேடிக்கை
பார்த்துக்
கொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka