வறுத்து பிழிந்தெடுத்த நெடுங்கோடைக்குபின்னர் பிற்பகலில்
முக்கால் மணி நேரம் சீரான மழை. .
மழையின் முன்னறிவிப்பாக மண் வாசனை பரவியது .
மழைக்கு முந்தைய கணம் வரை நீறி நிறைந்த கோடை வெப்பத்தை
பெரும் முட்டையாக மாற்றி மண்ணுக்குள் புதைத்து அவித்தது போல இருந்தது அந்த மண்வாசனை.
மழையை அவதானிக்க பின் மாடத்தில் நின்றிருந்தேன்.
எதிர் பக்க வெட்டையில் மனித பிஞ்சொன்று தன்னந்தனியாக அதற்கே உரிய நடன வரவேற்பளித்து
ஆடியது. அது என்னைக்கவனிக்கவில்லை. சில கணங்களே நீடித்த அந்த குழந்தை நடனத்தில் உற்சாகமடைந்த
மழை வலுத்தது.
குழந்தையும் மழையையும் பிடித்தாட்டிய கொண்டாட்ட போதை
தலைக்கேற மொட்டை மாடியில் நின்றும் உருண்டும் மழையை உடலின் ஒவ்வொரு துகளுக்குள்ளும்
வாரிக்கொண்டேன்.
No comments:
Post a Comment