Saturday, 14 December 2019

வலி ஆசிரியன்






எஸ்.ராமகிருஷ்ணனின் வரிகளில் உள்ள பருண்மையை ஒரு வாரத்திற்கு முன்னர் நானே பட்டறிந்தேன். சிறு அறுவை பரிகாரத்தின் பின்னர் வந்த 16 மணி நேரங்களும் வலியில் முங்க முங்க தோய்த்தெடுக்கப்பட்டவை.

சுற்றி வளைத்து வியூகம் அமைத்து தாக்கிய வலியானது சுகத்தின் அனைத்து தடயங்களையும் வாழ்வின் அனைத்து பிடிமானங்களையும் உரித்தெடுத்து விட்டது.


துணைக்கு வந்த இல்லாள் தாதியைக் கூப்பிட்டு வந்தாள். அது அப்படித்தான் இருக்கும் என கையை விரித்து சென்று விட்டாள் தாதி . அவளுக்கு இது ஆயிரத்தோராவது ஆளாக இருக்கும். இல்லாள் செய்வதறியாது திகைக்க நான் மட்டும் அறுத்த ஆட்டைப்போல துடிதுடித்தேன். கையை விரித்தும் கூப்பியும் இறைவனிடம் முழு சரணாகதி. விடிந்ததும் செவிலியரிடம் மன்றாட்டம் .

மதிய வாக்கில் இயல்பு நிலை திரும்பியதும் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் அமிர்தமாக தோன்றியது.
வெயிலின் வழியாக நிழலை உணர்த்தும் வலி ஒரு வலிய ஆசானே.


எஸ்.ராமகிருஷ்ணன் தி ஹிந்து தமிழ் நாளிதழில் எழுதும் தொடரில்..............

" எத்தனை வயதானாலும், எவ்வளவு வசதி, எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் வலியை எதிர்கொள்ளத்தானே வேண்டும்.

வலி யாருக்கும் கருணை காட்டுவது இல்லை. வலியின் முன்பு அனைவரும் சமமே.

உண்மையில் வலி கற்றுத்தருகிறது. வலியின்போது வரும் கண்ணீர் நமக்கு சில பாடங்களைப் புகட்டுகிறது. மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தவுடன் அந்தப் பாடங்களை நாம் மறந்துவிடுகிறோம்...... '

No comments:

Post a Comment