சிறந்த
ஒரு பாடலை நல்லதொரு வரியை
இன்னிசையின் ஒரு கீற்றை
சுவைக்கும் தருணத்தில் திடுமென ஒரு புள்ளியில் மனம் மெய் வாக்கு அனைத்தும் நிறைந்து இருப்பின் தன்னுணர்வு அழிந்து மனம் உன்மத்தம் கொள்கிறது.
இன்னிசையின் ஒரு கீற்றை
சுவைக்கும் தருணத்தில் திடுமென ஒரு புள்ளியில் மனம் மெய் வாக்கு அனைத்தும் நிறைந்து இருப்பின் தன்னுணர்வு அழிந்து மனம் உன்மத்தம் கொள்கிறது.
அந்த உச்சகட்ட கொந்தளிப்பு தணிந்து மனம்
தரைக்கு மீளும்போது ஏற்படும் துயரத்தை அழிக்கும் வலுவும் ஆன்மாவிற்கு இல்லை.
முதுமையையும், வெறுமையையும் யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது. என்றாலும்
ஒருவருக்கொருவர் துணை என்ற ஆசுவாசம் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
இரண்டு குடிகாரர்களைப்போல, தனித் தனி கோப்பைகளில், நமக்கான தனித் தனி
விஷத்தை, நாம் சேர்ந்தே குடிப்போம்.
என் விஷம் என்னைக் கொல்லும்வரை...
அல்லது
உன் விஷம் உன்னைக் கொல்லும் வரையேனும்...
அல்லது
உன் விஷம் உன்னைக் கொல்லும் வரையேனும்...
( எழுத்தாளர் திலீப்குமாரின்
“ நிகழ மறுத்த அற்புதம் “ சிறுகதை தொகுப்பிலிருந்து…..)
நோபல் பரிசு
பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் சிறந்த பத்திரிகையாளருமான கிழவனும் கடலும் உள்ளிட்ட சிறந்த
கதைகளின் படைப்பாளியுமான எர்னஸ்ட் ஹெமிங்வே பெரும்புகழும் செல்வமும் ஆடம்பர வாழ்வும்
கொண்டவர்.
“ மனச்சோர்வின் காரணமாக எழுத முடியாத நிலையில் இருந்திருக்கிறார்.எவ்வளவு
முயன்றும் அவரால் புதிதாக ஒரு வரி கூட எழுத முடியவில்லை.
புகழ் தன்னை வேதனைப்படுத்துகிறது. தன்னை ஒரு காட்சிப்பொருளாக
மாற்றிவிட்டது. அதுவும் நோபல் பரிசு போன்ற பரிசுகள் எழுத்தாளனின் தனிமையை , சுதந்திரத்தை
விழுங்ககூடியவை என்று கத்துகிறார்.
எங்கே போனாலும் அவரை வாசகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.
கையெழுத்துக் கேட்கிறார்கள். தனது அக நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக ஹெமிங்வே குடித்துக்
கொண்டேயிருக்கிறார். எழுத முடியாத ஒரு வாழ்க்கை தனக்கு எதற்காக எனத் தற்கொலை செய்து
கொள்ள முயற்சிக்கிறார்.
சாகசகாரனாக வாழ்க்கையைச் சந்தித்த ஹெமிங்வே 1961ல்
மனவெறுமையில் தற்கொலை செய்து கொண்டார்…. “
“ஹெமிங்வே – இரண்டு திரைப்படங்கள்” http://www.sramakrishnan.com/?p=7703
எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவிலிருந்து….
சமீபத்தில் நான் வாசித்த வரிகள் இவை.
அன்றாடங்களின் சலிப்பின் பசையில் அழுந்தி கிடக்கும் மனிதர்களின் சராசரி மன நிலைக்குள் ரசவாதம் நிகழ்த்தும்
படைப்பாளிகள்.
கருப்பு வெள்ளையாய் இரவும் பகலுமாய் மட்டுமே அறியப்படும்
வாழ்க்கையின் மகா தொகுப்புக்குள் அமிழ்ந்து கிடக்கும் வண்ணங்களை தோரணங்களாக விசிறியெடுக்கும்
எழுத்துக்களின் உரிமையாளர்களுக்குள் ஏன் இத்தனை தனிமையும் வெறுமையும் ஊறிக் கிடக்கின்றன.
மந்தைகளுக்காக சிலுவையில் பாடுகளை ஏற்று மரிக்கும்
இயேசுவைப்போன்ற வலி சுமக்கும் தீர்க்கதரிசிகளா படைப்பாளிகள் ?.
படைப்புகள் விலக்கியகற்றும் சமூகத்தின் மொத்த வலியும்
நிராசையும் பின்புறமாக மீண்டு வந்து கரந்து
பாய்ந்து படைப்பாளிகளின் மென்னையை கவ்வும் வேட்டை விலங்குகளா ?
No comments:
Post a Comment