Friday, 13 December 2019

எஸ்.ராவின் பதின் நாவல்






மின்சாரம் தடைப்பட்ட நேற்றைய பகல் பொழுதில் எஸ்.ராவின் “ பதின் “ ( உயிர்மை வெளீயீடு ) நாவலை முழுவதும் வாசித்தேன்.

எஸ்.ராமகிருஷ்ணன் தனது வழமையான எழுத்து பாணியை இந்த நாவலில் ஒதுங்கி நிற்க வைத்து விட்டார். வைக்கம் முஹம்மது பஷீரின் சாயலும் கதைகளில் அவ்வப்போது வந்து போகின்றது.


உள் வெளி மடிப்புகள் சொல் மயக்கங்கள் எதுவுமில்லாமல் விடலைப்பருவ மனதின் முக்கால் பாகத்தை ஆடையேதுமற்ற குழந்தையின் இயல்பான அம்மணத்தோடு நாவலின் பக்கங்களில் பதிந்துள்ளார்.

ஒரு நாட்குறிப்பு போல இருக்கும் இந்த நாவலின் அழகு என்பதே வளரிளம்பருவத்தின் புதிர்த்தன்மையை பதிவுகள் முழுக்க சேதாரமில்லாமல் கச்சாவாக பரவ விட்டிருப்பதுதான்.

இதில் பெரும்பான்மையான குறிப்புகள் சிறுகதை, நெடுங்கதைக்கான வீச்செல்லையை தன்னுள் கொண்டிருப்பவை.

இந்த நாவலில் பதியாமல் விடுபட்ட முக்கியமான விஷயம், வளரிளம் பருவத்தை அலைக்கழிக்கக் கூடிய கொப்பளித்து நுரைக்கும் காமத்தை கையாள்வதில் அந்த பருவத்திற்குள்ள பிரச்னைகள்.

இது பற்றிய ஒரு கதையாவது இருந்திருந்தால் இந்த பதின் நாவல் தன் பருவத்தின் முழுமையை எட்டியிருக்கும்.

2 comments:

  1. நீங்கள் எழுதலாம்தானே, விடுபட்டதைப்பற்றி !

    ReplyDelete
    Replies
    1. எழுதுவதற்கு விஷ்யம் இருக்கின்றது. ஆனால் வரம்பை பேண முடியுமா எனத் தெரியவில்லை. அதுதான் தயக்கத்திற்கு காரணம்

      Delete