நல்லடக்க நிகழ்வொன்றிற்காக இடுகாட்டிற்கு சென்றிருந்தேன்.
அது ஒற்றைத்தடம். என் பாதணிகளுக்கு கீழே ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தேன்
குளி்ர்மையும்
வெம்மையும்
கொண்ட
எத்தனை
எத்தனை
சொற்கள்
ஒரு கவள
உணவிற்கும்
ஒரு நீள்
வளைய
முத்தத்திற்குமான
எத்தனை
எத்தனை
துளி
எச்சில்
சுரப்புகள்
அந்த
பற்களின்
மீது
கடந்து
சென்றிருக்கும்?
சிரிப்பு
இளிப்பின்
எஞ்சிய
பாவனைகளுடன்
பழுப்பேறி
போய்
அது
மண்ணில்
புரண்டுக்
கொண்டிருந்தது.
No comments:
Post a Comment