தொடக்க பள்ளி காலங்களில் என்னுடன் படித்தவன். அதன்
பிறகு இடையில் என்றோ ஓரிரு தடவை பார்த்த நினைவு மட்டுமே.
படிப்பு காலத்திற்கும் அவனது இறப்பு செய்தி கேட்டதற்கும்
இடையில் நாற்பது வருடங்கள் கடலடி ஆமையைப்போல ஊர்ந்து சென்றிருக்கின்றது.
அவனது நிறைந்த செய்தி கேட்கும்போது மட்டுமே அவனது
முகமும் பெயரும் நினைவுகளும் மனதின் சேகரத்திலிருந்து மேலெழுகின்றது .
இறப்பில் மட்டுமே குழந்தை பருவத்து நண்பர்களை மீண்டும்
கண்டும் காணா முடியாத அவலம்
No comments:
Post a Comment