Sunday 27 October 2019

எட்டாவது நாள்

சென்னை தில்லி ஜய்ப்பூர் மும்பை கொல்கத்தா கொழும்பு என எந்த நகரமாகயிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை என்பது மற்ற ஆறு வார நாட்களின் மண்ணறைக்குழிதான்.



வாரத்தின் எல்லா ஓசைகளும் ஓட்டங்களும் ஞாயிற்றுக்குள் போய் ஒடுங்கிக் கொள்கின்றன. குறிப்பாக ஞாயிறு மாலையில் வார நாட்களின் பிணவாடை வீசுகின்றது.


ஜப்பானில் வாரவிடுமுறை முடிந்து திங்கள்கிழமை வேலை நாள்  தொடங்கும்போது தற்கொலைகள் நடக்கும். விடுமுறையின் குளிர்மையிலிருந்து வாராந்திர பணி நிரலுக்குள் தன்னை நுழைக்கும் மனிதனுக்குள் ஏற்படும் மன உராய்வானது தன் மாய்ப்புக்குள் தள்ளி விடுகின்றது.

இதற்கு திங்கள் துயரம் என்று பெயர்


ஞாயிறுக்குள்ளும் திங்களுக்குள்ளும் பொருந்த இயலாதவர்களுக்கான எட்டாவது நாள் உண்டா?

No comments:

Post a Comment