ஆங்கிலத்தில் கவிதை எழுதியவர் : எம்.நவ்ஷாத்
தமிழாக்கம்: ஆஷிர் முஹம்மத்
குரல்:சாளை பஷீர்
---------------------------
காஞ்சங்காட்டிலிருந்து அன்றிரவு கோழிக்கோடு வந்தடைந்தோம். அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியொன்றில் இரவு தங்கல். அதன் ஆய்வு மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலும் நடந்தது. கோழிக்கோட்டின் அலைச்சலும் அயர்வும் மிக்க மறு நாள் பகலிலிருந்து கிடைத்த ஓய்வென்பது கோட்டயத்திற்கான தொடர்வண்டியில் ஏறிய பிறகுதான்.
காலை உடற்பயிற்சி நேரங்களில் துணைக்கு இருக்கும் வானொலியில் ஒலித்த அந்த நேர்காணலும் அப்பெயருமே இப்பயணச்சரட்டின் தலையாகியது.
கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் காஞ்சங்காட்டின் உலகம் காண் மனிதராகிய சி.முஹம்மது
குஞ்ஞுக்கா தனது வானொலி நேர்காணலில் சொன்ன வரிகள் ஈர்ப்பு விசைக் கொண்டவை.
“நான் இதுகாறும் நாற்பது நாடுகள் வரை பயணித்திருக்கிறேன். இரஷியா,ஸ்பெயின்
உள்ளிட்ட இன்னும் கொஞ்சம் நாடுகளுக்கு போக வேண்டும்.எனக்கு கொஞ்சம் நிலங்களுண்டு.அவற்றை
விற்று விட்டு செல்வேன்.”