'செப்புக்கிடாரம்' என்ற சொல் ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப் பிறகு புலன்களுக்கு இடையே மீண்டிருக்கிறது.
என்னுடைய பதினோராவது வயதில் பொன் சிவப்பு நிறங் கொண்ட தூண் என நினைவு. 'தாமிரபட்டணம்' நாவலின் அட்டைப்படமாக அது இருந்தது. புரிந்தும் புரியாததுமான வயதில் மதிய மாலை வெளிச்ச படலத்தில் அதை படித்து முடித்தேன்.
தாமிரபட்டணம் என்றால் பொரித்த முட்டை என்பதாக அந்த சிறு வயது புரிந்து கொண்டிருந்தது. அட்டையின் பொன்னிறமும் ஆம்லெட்டின் நிறமும் கதையின் வர்ணனைகளும் அப்படியான ஒரு எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்திருந்தன. இன்று சீர்மையின் வெளியீடாக வந்திருக்கும் தாமிரபட்டணம் நூல் அதே மதிய மாலை வெயிலில் எல்லா நினைவுகளையும் என் வாசிப்பு பலகையின் மேல் மீட்டிக் கிடத்தியுள்ளது.
நாவலின் முதல் அத்தியாயத்தின் பெயரே செப்புக்கிடாரம் தான்.
No comments:
Post a Comment