Monday 26 June 2023

தோந்நிய யாத்திரா நூலுக்கு ஆய்வாளர் அப்துல் மஜீத் நத்வியின் மதிப்புரை

நண்பரும் ஆய்வாளருமான அப்துல் மஜீத் நத்வி தோந்நிய யாத்திரா நூலுக்கு மலையாளத்தில் எழுதிய மதிப்புரையின் தமிழாக்கம்.

ஆய்வாளர் அப்துல் மஜீது நத்வி


சாளை பஷீர்; காயல்பட்டின மரபின் தூதர்


தனித்துவமான வரலாற்று மரபு தொடர்ச்சியையும் பண்பாட்டு தனித்துவத்தையும் பாதுகாக்கும் காயல்பட்டினத்திற்கு வரும் வரலாற்றாய்வாளர்களின்  வழிகாட்டியும் உபசரிப்பாளருமான சாளை பஷீர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வாழ்க்கை, வரலாறு, பயணம் என பல்வேறு தலைப்புகளில் பல எழுத்துக்களை தமிழில் எழுதிய சாளை பஷீர், கசபத் என்ற நாவலையும் வெளியிட்டுள்ளார்.

 நாவல் உட்பட நான்கு படைப்புகளின் சொந்தக்காரர் இவர். மலையாளத்தில் வைக்கம் முகமது பஷீர், தமிழில் தோப்பில் முகமது மீரான் ஆகியோரின் தொடர்ச்சியாக, தன் வரலாறாக கதை சொல்லும் தமிழ் நாவலாக இதை விமர்சகர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.

 அண்மையில் வெளியான 'தோந்நிய யாத்திரை' ஒரு வித்தியாசமான பயண விளக்க நூல்.

 கசபத் (நாவல்), மலைப்பாடகன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வாழ்க்கை), என் வானம் என் சிறகு, தோந்நிய யாத்திரை (பயண குறிப்புகள்) ஆகிய நூல்கள்.

 இறுதியாக வெளியான தன் புத்தகத்திற்கு 'தோந்நிய யாத்திரை என மலையாளத்தில் தலைப்பு கொடுத்திருக்கிறார். இந் நூலில் உள்ள ஆறு பயண பதிவுகளில் ஐந்து கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற பயணங்களின் குறிப்புகளாகும். ஆகவேதான் புத்தகத்தின் தலைப்பானது மலையாள பெயரில் கொடுக்கப்பட்டது  என்கிறார்.



 நாகூர் பயணத்தை விவரிக்கும் அத்தியாயம் கூட அந்த பயணத்தின் கேரள உறவை குறிப்பதன் மூலம் தொடங்குகிறது. கோழிக்கோடு பயணத்தின் போது குற்றிச்சிறாவில் முச்சந்தி பள்ளிவாசலுக்கு சென்ற சமயம்,அங்கேயும்  நாஹூர் ஷாஹூல் ஹமீது வலிய்யுல்லாஹ்  தனித்து தியானித்த இடத்தைப் பார்த்ததுதான்  நாகூர் பயணத்தின் வழி வகுத்திருக்கிறது

.முஸ்லிம் வாழ்வை கருவாக்கிய கதை சொல்லிகளின் பின்னணி காண்பதற்கான பயணங்களில் வைக்கம் முகமது பஷீர் பிறந்த தலயோலப்பரம்பு, கோட்டயம், அவர் வசித்த கோழிக்கோடு பேப்பூர். ஓ.வி.விஜயனின் பூமியான பாலக்காடு தஸ்ராக் நோக்கிச் சென்ற பயணங்கள் என முதல் இரண்டு அத்தியாயங்கள். பிற அத்தியாயங்களில் பொன்னானி, கொண்டோட்டி, மம்புரம் தங்ஙள், திருவனந்தபுர பயணங்கள்

 எளிய வாழ்க்கையும், தேடல் பாணியும் சாளை பஷீர் காக்காவின் அடையாளங்கள். வரலாறு, மரபு பற்றிய அறிவைத் தேடி அலைதல் அதன் பாதுகாப்பிற்காக கடுமையாக உழைத்தல் என பஷீர் சாஹிபின் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

 காயல்பட்டின கேரள தொடர்புகளை வெளிக்கொணரும் மலபார்-மஃபர் வரலாற்று வேர்களைத் தேடிடும்  பெரும்பாலான ஆய்வு ஆராய்ச்சிகளுக்கும் பின்னால் வரலாற்று விரும்பியான இவரின் உதவியைக்  காணலாம்.

குஞ்ஞாலி மரைக்காயர், பொன்னானி மக்தூம் தலைமுறை, மட்டஞ்சேரி நெயினார்களினதும் சோழ மண்டல கரையோர வேர்களைத் தேடி காயல்பட்டினத்துக்கு வரும்  வரலாற்றாய்வாளர்களை உபசரித்து  உதவிடுவதோடு, துல்லியமான வரலாற்று  உண்மைகளை நல்கியும், இடங்களை காண்பித்தும் நேரத்தை செலவழிக்கும் சாளை பஷீர்  சாஹிபை காயல்பட்டின மரபின் தூதர் என அழைக்கலாம்.



மலையாளத்தில் எழுதப்பட்ட மதிப்புரை

 


No comments:

Post a Comment