" தோந்நிய யாத்ரா " புத்தகத்தின் அறிமுகம் / மதிப்புரை / விமர்சனம்
Thursday, 27 April 2023
" தோந்நிய யாத்ரா " புத்தகத்தின் அறிமுகம் / மதிப்புரை / விமர்சனம் -- AHMED AQ
Friday, 21 April 2023
தீண்டாமையை நிரந்தரமாக அழித்தவர் ---- செய்யது ஃபழ்ல் தங்ஙள்
தீண்டாமையை நிரந்தரமாக அழித்தவர் ---- செய்யது ஃபழ்ல் தங்ஙள்
MAPPILA LEADER IN EXILE – A political biography of syed Fazl Tangal
By KK Muhammad Abdul Sathar
பா அலவிகள்
– பதினெட்டாம் நூற்றாண்டைய கேரளத்தின் மலபார் பகுதியில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள். நபியவர்களின் தலைமுறையில் உதித்த இவர்களில் மிகவும்
அறியப்பட்டவர்கள் செய்யது அலவி தங்ஙளும் அவரது ஒரே மகனான செய்யது ஃபழ்ல் தங்ஙளுமாவர்.
Wednesday, 5 April 2023
தஸவ்வுப், இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம் -- (கலாநிதி. எம்.ஏ.எம். சுக்ரி) -- நூல் பார்வை
தஸவ்வஃப்
என்றால் சூஃபியாகுதல் எனப்பொருள்.
இலங்கையின்
தலை சிறந்த கல்வியாளர், அறிஞர்களில் ஒருவரான மறைந்த கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்கள்
சூஃபியியம் பற்றி இஸ்லாமிய சிந்தனை’ முத்திங்கள் சஞ்சிகையில் எழுதியவற்றுடன் புதியதாக
சில கட்டுரைகளையும் இணைத்து வெளிவந்திருக்கும்
நூல் இது.
அன்னாரை 2003 – 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று
முறை இலங்கை ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் சந்தித்திருக்கிறேன்.
அவருடன் கை குலுக்கும்போது ஒரு மலரின் மென்மை தலைக்குள் கடந்தது. நித்திய தொடுகைகளின் சேகரத்தில் ஒரு பொன்னிறகு.