Wednesday, 25 January 2023

தோந்நிய யாத்ரா -- ஷரஃபுத்தீன் தஸ்தகீன் கடிதம்

 


 

தோந்நிய யாத்திரா படித்தேன் காக்கா அற்புதமான ஒரு ஆவண நூல். எனக்கு உங்களுடன் பயணம் செய்தது போல் இருந்தது.உங்களுக்கு பிறகும்  இந்த நூல் உங்களை  பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

ஒரு ஊர் அந்த ஊரின் சிறப்பு அந்த ஊரின் உணவு அந்த மக்களின் பண்பாடு எதையும் விட்டு வைக்காமல் அரசியலையும் முன்னிறுத்தி, இனி வரும் சந்ததியினருக்கு ஒரு சான்று பகர்கிறது இந்த நூல்.

எனக்கு மிகவும் ஆச்சரியமானது  நாகூர் சாகுல் மீது வலியுல்லாஹ் அவர்கள்  பரங்கிகளை முற்றோடு அழிக்க அவர் காட்டித் தந்த வழிமுறை.

மிகவும் ஆச்சரியப்படுத்திய  இது போன்ற அறியாத விஷயங்களையெல்லாம் இந்த புத்தகத்தில் பதிவாக்கி விட்டீர்கள்  இன்னும் சொல்லப் போனால் மாப்ளாமார், போராட்டத்திற்கு எப்படி எல்லாம் மக்களை ஒன்று திரட்டினார்கள் என்பதை  கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

 பிரிட்டிஷ் அரசாங்கமே தடை செய்யும் அளவுக்கு மொயின் குட்டி வைத்தியர் அவர்களால் எழுதப்பட்ட பாடல்கள்,  கோலோச்சியிருந்திருக்கின்றன. இவையெல்லாம் எங்கள் கண் முன்னே கண்டு விரிந்து எங்கள் சிந்தனையின் ஆழத்திலும் இறங்கி அந்த மனிதர்களுடைய வீரத்தினால் மெய்சிலிர்த்தது.

மொய்து கிழிச்சேரி ஒரு மகா மனிதர் .நீங்கள் யாத்திரையில் கண்ட மனிதர்களை எல்லாம் நாங்களும் கண்டோம். நன்றி

ஒரு அலைக்கழிக்காத படகில் சென்று கடந்த கால மனிதர்களோடு அளவளாகியதாக  இந்த யாத்திரை இருந்தது.

 சிறந்த எழுத்து நடை சீர்மை மிக அழகாக இந்த புத்தகத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கும்  ஒரு நன்றி.

பின்னட்டையில் உங்கள் ஃபோட்டோ எதார்த்தமான ஒரு அழகிய புகைப்படம். நல்ல பயணத்தின் சாட்சி.



No comments:

Post a Comment

An Evening Train in Central Sri Lanka