Monday 11 April 2022

கசபத் மதிப்புரை -- பேரா. ஆர். முஹம்மது ஹசன்

 

எழுத்தாளர்  சாளை பஷீர்  அவர்களின் முதல் நாவலான ‘கசபத்’தை சமீபத்தில் படித்தேன். தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை ஊரான காயல்பட்டினம் தான் கதையின் நிகழ்விடம். காயல்பட்டினத்தை  மையமாகக் கொண்டு அதன் வட்டார மொழியில் பண்பாட்டுப் பின்னணியில் வரும் முதல் நாவல் என நினைக்கிறேன்.



 காயல்பட்டினம் மிகப் பழைமையான வரலாற்று எச்சங்களையும் பல சூஃபி அறிஞர்களின் தடங்களுடன் தமிழ் செறிவும் கொண்ட இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் ஓர் ஊர். இந் நாவலின் ஆசிரியர் சாளை பஷீரின் சொந்த ஊரும் கூட.

 

தான் கண்ட வாழ்வியல் முறைகளை எளிய மனிதர்களை சிலாகித்த இடங்களை மிகையில்லாமல் பதிவு செய்திருக்கிறார் சாளை பஷீர். காயல்பட்டின ஊரார் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்றாலே சிவப்புத் தோல் உடையவர்கள், பெரும் செல்வந்தர்கள் என பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைத்தெறிந்து இருக்கிறார்.

 

இந்நாவலில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் எளிமையானவர்கள், மனிதர்களுக்கே உரிய நிறை குறைகளுடன் இருப்பவர்கள். அபூ எனும் இளைஞனை பற்றிய கதைதான் இந்நாவல். கதையை நாயகனே எடுத்துரைக்கும் படி எழுதப்பட்டு இருக்கிறது. அபூ 1960களின் பிற்பகுதியில் பிறந்தவன். கதையின் பெரும்பகுதி 1980- 90களில் பயணிக்கிறது.

 

உலகமயமாக்கல், பொருளாதார தாராளமய வாதம், இந்துத்துவ அரசியலின் எழுச்சி என நாடு பல தளங்களில் மாற்றங்களைக் கண்ட நேரம். இந்நாவலின் பேசுபொருள் இவை இல்லை என்றாலும், நாயகன் அபூவின் வாழ்வில் இவை பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறன. 1980களின் இறுதிப்பகுதியில் அபூ பதின்ம வயதை கடக்கிறான். அவன் வயதையொத்த அனைவரும் எதிர்கொள்ளும் கேள்வியையே அவனும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

 

 "என்ன வேலை (தொழில் பார்க்க போகிறாய்?)"கதையின் தொடக்கத்தில் ஊர் பெரியவரிடம் இக்கேள்வியை முதன்முதலில் எதிர்கொள்கிறான். பின் வாழ்வெங்கும் மிக நீண்ட காலத்துக்கு அக்கேள்வி அவனை விடாமல் துரத்துகிறது. முதலில் கேள்வியை எதிர்கொள்ள அஞ்சுகிறான், எரிச்சலடைகிறான். பின் அக்கேள்வியை கொண்டே அவனுள் ஓர் உரையாடலைத் தொடங்குகிறான். வயதும் அனுபவமும் அத்துடன் தன்னுள் எழுந்த கேள்வி, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த 'தன் உரையாடல்' (செல்ஃப் கன்வர்சேசன் ), அபூவை எவ்வாறு முழுமையாக்குகி ன்றது என்பதே இந்நாவல்.

 

பொருளாதார வளர்ச்சி வாழ்வின் ஓர் அங்கமா? அல்லது பொருளாதார வளர்ச்சி மட்டுமே வெற்றியின் அளவீடா? என்ற கேள்வி அவன் முன் பூதாகரமாய் நிற்கின்றது.

 

காலமாற்றத்தால் அனேகர் பொருளாதார வளர்ச்சியின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கையில், அபூ இக்கேள்வியை எதிர் கொள்கிறான். பொருளாதார ஓட்டத்தில் சுயத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான். பொருளாதாரத்துடன் போராடிக் கொண்டிருக்கையில் இந்துத்துவ அரசியலும் அவனை துரத்துகிறது. தான் இந்த சமூகத்தில் 'மற்றமை'யாக்கப்பட்டதை  உணர்கிறான். அதற்கு எதிர்வினையாற்ற முயல்கிறான். பொருளாதார கேள்வியுடன் சேர்த்து இதுவும் அவனை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகிறது.

 

கல்லெறிந்த குளம் சலம்பித் தெளிவதுபோல் காலம் அவனை முழுமை படுத்துகிறது. எந்தக் கேள்வியைக் கண்டு ஓடினானோ அதே கேள்வியை நிதானமாக எதிர் கொள்ளும் நிலையை அடைகிறான்.

 

கதை ஒரே சீராக பயணிக்கிறது. எளிமையான உள்ளூர் வட்டார மொழியை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். காயல்பட்டினத்தில் பிரதான அடையாளமாக உள்ள பள்ளிவாசல்களையும், கடற்கரையையும், நூலகத்தையும் அழகாக யதார்த்தத்துடன் விவரிக்கிறார். இவை நாயகன் அபூவின் மனத்திற்கு நெருக்கமான இடங்கள். அவன் அவனிடம் உரையாடுவதற்கு இவைகள் துணை புரிகின்றன. இன்னும் சொல்லப்போனால் அவை அவனையும்  செதுக்குகிறன.

 

இந்நாவலின் மூலம், அபூவினுடைய  வாழ்வின் ஊடாக எளிய மக்களின் வாழ்வியலை  கலாச்சாரக் கூறுகளை அவர்கள் பெற்றதும் இழந்ததும் என மிகையில்லாமல் கூறுவதால் இப்புதினம் சிறந்ததொரு ஆவணமாகிற து.  

 

வாழ்த்துகள் சாளை பஷீர்.




-------------------------------------------------

கட்டுரையாளர் ஆர். முஹம்மது ஹசன்(rmohamedhasan82@gmail.com) மேல் விசாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் பேராசிரியராக பணியாற்றுகின்றார்

Kasabath – Book Review

 

I have recently read Salai Basheer's first novel 'Kasabath'. Kayalpattinam, a coastal town in the Thoothukudi district of southern Tamil Nadu, is the setting of the story. Probably this is the first novel to focus on Kayalpattinam,its cultural background and local slang which is peculiar. Kayalpattinam is a historical place where trade had been flourished and many Arab traders had settled there. Besides, it a home of  Tamil scholars and had traces of many Sufi scholars. It is also a hometown of the author of this novel, Salai Bashir. He has recorded, without exaggeration, the places in which he has chiseled, the way of life which he found in the town. In this novel, the author have broken many stereotypes that had constructed in the public mindset especially Muslims are fair in terms of skin colourand all  Muslims of Kayalpattinam are super-rich. The characters in this novel are mostly simple and had their own merits and demerits which is a part of human nature.

       This novel is about a young man named Abu. The story was narrated by the protagonist of novel. Abu was born in the late 1960s. Much of the story travels back to the 1980s-90s. It was a time when the country witnessed tremendous changes on many fronts such as globalization, economic liberalism and the rise of Hindutva politics. Although these are not  formed the theme of the novel, it have had an impact on Abu's life. Abu was in his late teens in early 1980s. He had to face the same question that everyone his age faces. "What job? (for a career?") At the beginning of the story he had faced this question first from the elder of the town in a bank and then had been facing continuously  for a very long time in his life. The question haunts him for a long time. This novel is about how the continuous 'self-conversation' (self-conversation), emanated from this question, had shaped  Abu. Is economic growth a part of life? Or Is economic growth the only measure of success? These types of questions were standbefore him.

 While the whole world, including his friends are running behind the money and took economic growth and mainly economic growth alone,as a scale of success on the passage of time, Abu chose to find the answer to these questions. He is determined not to lose himself  in the economic flow. Hindutuvapolitics is also chasing him as he struggles with the economy. During the process, he realizes that he is becoming 'other' in this community. He made an attempt to react to it. This, along with the economic question, makes his life even more complicated. Time shaped him as the stony pool swells. As the time passes, he had not escape from the question he had scared since in his late teens nor struggled to answer. Instead he had faced it with confident and calm.

  The story travels uniformly.The author excelled in his narration and description. He beautifully describes the mosques, the beach and the library which are the main landmarks of Kayalpattinam. These are the places closest to the mind of the protagonist of this novel. These help him to converse with him. In other words, they carved him too. The novel becomes an excellent document as it narrates the biographical and cultural elements of the lives of ordinary people of kayalpattinam through Abu's life.

Congratulations Salai Basheer

No comments:

Post a Comment