Tuesday, 26 April 2022

ஜெயமோகன் 60





ஆர்.எஸ்.எஸில் தன் இளமையைக் கழித்தவர்.


பாபரி மஸ்ஜிதிற்கெதிரான ஹிந்துத்வ ஆற்றல்களின் பரப்புரைகளும் செயல்பாடுகளும் சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தில் தனது பத்து அவதாரங்களில் ஒன்றாக இராமனை தரித்துக் கொண்ட விஷ்ணுவின் பெயரால் விஷ்ணுபுரம் நாவல் எழுதினார். இந்த நாவலை ஆர்.எஸ்.எஸ். விற்றுத்தர வேண்டும் என கடிதம் எழுதி அது போலவே ஆர் எஸ் எஸின் வஸ்து பண்டாரிலும் அதன் நூல் அரங்குகளிலும் விஷ்ணுபுரம் வீற்றிருந்தது.

குஜராத் இனப்படுகொலை பற்றிய தமிழாக்க நூலை இந்துக்களின் வீர வரலாறு என சிலாகித்தவர்.

பின் தொடரும் நிழலின் குரல் நாவல் வழியாக இடதுசாரிகள் மீது அவதூறுகளை அள்ளிச் சொரிந்தவர்.

பாபரி மஸ்ஜிதானது இராமர் கோவில் இடிபாடுகளின் மீதுதான் கட்டப்பட்டது என்ற நிலைப்பாடு கொண்டவர்.

மக்கள் வாக்களித்திருப்பதால் பாஜக தனது விருப்பப்படி கல்விக்கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்திட உரிமையுண்டு என எழுதியவர்
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை நினைத்தால் முதுகந்தண்டு சில்லிடுகின்றது என எழுதியவர்.

தர்காக்கள் இந்துக்கள் கையில்தான் வந்து சேரும் என என எதிர்கால கரசேவைக்கு அடிக்கல் போட்டது.

கர்நாடக ஹிஜாப் தடை விவகாரத்தில் பர்தா பிற்போக்கானது. அது வஹ்ஹாபிய அறிமுகம் என வாதிடுபவர்.

நாடெங்கும் ஹிந்துத்வ நாஜிகள் முன்னெடுக்கும் முஸ்லிம் இன அழித்தொழிப்பு எத்தனங்களில் முஸ்லிம்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரை வழங்குபவர்:
“இந்திய முஸ்லிம்கள் தேசிய முஸ்லிம்களாகத்தான் வாழ வேண்டும். மதத்தை வீட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அரசியலுக்குள் இஸ்லாத்தை கொண்டு வரக்கூடாது. தனக்கென தனி கட்சி அடையாளம் இவைகளை துறந்து விட்டு பொது மகனாகத்தான் இங்கு வாழ வேண்டும். காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளில்தான் இணைய வேண்டும்”.

ஹிந்துத்வ நாஜி அரசியலுக்கெதிராக இயங்கும் அறிவாளிகள்,செயல்பாட்டாளர்கள்,ஊடகவியலாளர்கள் மீது அவதூறுக்ளையும் பொய்களையும் அள்ளி விடத்தயங்காதவர். ( எ.கா: அருந்ததி ராய். அ.மார்க்ஸ், எச்.வி.இராஜதுரை, எம்டி முத்துக் குமாரசாமி….. ).

ஹிந்துத்வ நாஜிகள் நடத்தி வரும் படுகொலைகள், அட்டூழியங்கள் பற்றி ஒரு வரி கூட எழுதவியலா அறிவு, உணர்வு ஊனமுடையவர்.

விஷ்ணுபுரம், குமரகுருபரன் விருதுகள் வாயிலாக வலதுசாரி இலக்கியங்களுக்கெதிரான மௌனத்தை உறுதிப்படுத்துவதுடன் தனக்கான பீடத்தையும் நிறுவிக் கொண்டவர்.

இவ்வளவு தகைமசால் ஆசானை வாழ்த்த எப்படித்தான் வாயும் கையும் வருகின்றதோ?




No comments:

Post a Comment