Saturday 16 January 2021

திண்ணை நூலகம்

 நண்பரும் மூத்த எழுத்தாளருமான தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் தனது வீட்டு திண்ணையில் ஒரு நூலகம் தொடங்கியுள்ளார்.





இது தொடர்பாக அவரது முகநூலில் பதிந்தவை இங்கே மீள் பதிவிடப்படுகின்றது


---------------------------------



Thanjavurkavirayar

பொங்கல் திருநாளில் திண்ணை நூலகத்திறப்பு விழா அப்பா வைத்த புங்க மரம் வழிப்போக்கர்களுக்கு நிழல் தருகிறது. தெருவோடுபோகிறவர்களுக்கு நான் தரும் இளைப்பாறல் .ஞானத்தின் சிறிய நிழல்.


திண்ணை நூலகத்திறப்பு விழாவில் மூத்த எழுத்தாளர் பாரவிஅவர்கள் அரிய பல நூற்களையும் ஓவியர் வேதா அவர்கள் குழந்தைகள் புத்தகங்களையும் உத்திரமேரூர் வாசகர் ராஜா உத்திரமேரூரின் புகழ் பெற்ற
அய்யர் பொட்டலக்கடை பூண்டு
காராசேவையும் அக்கடையின்
சுவைமிகு பட்சணங்களையும்
வழங்கினார்.


தஞ்சாவூர்க்கவிராயர் தன் தந்தையின் பழமையான
புத்தகப் பெட்டியை நூலகத்துக்கு வழங்கி
திண்ணை வாசிப்பை தொடங்கி வைத்தார்


82 வயதுள்ள மூத்த வாசகர்நீலாம்பிகை ஆசீர்வதித்தார்.


இன்று எங்கள் வீட்டில் ஏன் எல்லோர் வீட்டிலும் தினமும் வாசிப்பைத்தொடங்கிவைக்கும் வசந்த்( பேப்பர் பையன்) இன்று.திண்ணை நூலகத்திற்கு வாசிக்க வந்தான்.


இன்று திண்ணை நூலகத்திற்கு நீலாம்பிகை அம்மையார் வந்தார் எழுத்தாளர் பாரவி பரிசளித்து ரஸிகமணி பற்றிய புத்தகம் வாசித்தார்அபாரமான வாசகர் தினமும் பூக்களை பரிசளிப்பார்.அவர் புறப்பட்டு சென்றதும் புத்தகங்கள் என்னை வாசிக்கலாயின.


------------------




திண்ணை நூலக திறப்பு செய்தி அறிந்தவுடன் வாழ்த்துவதற்காக தஞ்சாவூர் கவிராயரை தொடர்பு கொண்டபோது " நூலகம் காண வருவதோடு வீட்டில் சாப்பிட்டும் செல்ல வேண்டும்" என உத்தரவிட்டார். நான் தற்சமயம் காயல்பட்டினத்தில் இருக்கின்றேன் என்று சொன்னவுடன் சென்னை வரும்போது மறக்காமல் வாருங்கள் என்றார்.

நூலகத்திற்கு திறப்பு நேரம் மூடும் நேரம் என எதுவும் இல்லை. இது ஒரு முழு தின நூலகம் என்றார். வருகின்றவர்களுக்கு ஒரு குவளை தேநீர் அளிக்கவிருப்பதாகவும் சொன்னார்.

திண்ணை நூலக எண்ணம் எப்படி வந்தது? எனக்கேட்டதற்கு பாகு குரலில் அதை விளக்கினார்.

நான் சொன்னேன் " அய்யா ! நீங்கள் என்னிடம் சொல்வதை அப்படியே எழுத்தாக்குங்கள்" என்றேன். அவற்றை நான் இங்கு பதிவதை விட அவர் சொல்லில் அது மலர்வதுதான் சரி.

திண்ணையும் நூலகமும் இறந்த காலத்தின் அடித்தட்டுகளில் போய் மண்டிக்கிடக்கும் ஒரு நிகழ் காலத்தில் ஒரு படைப்பாளியின் முற்றத்தில் எல்லாம் உயிர் கொள்ளுகின்றது.

காரணம் அவன் படைப்பாளியல்லவா!!!





No comments:

Post a Comment