Saturday 5 September 2020

காந்தி படுகொலை – பத்திரிக்கை பதிவுகள்-- நூல் அறிமுகம்


 

இன்றைய பாஜக ஃபாஸிஸ  நடுவணரசு ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை, நாட்டுத்தந்தை காந்தியடிகளின் கொலை தொடர்பான தலையாய ஆவணங்களை காணாமலாக்கியதுதான்.

 

இதன் காரணத்தை உலகமே அறியும். காந்தியின் பச்சை ரத்தம் இவர்களின் உடல் ஆன்மாவெங்கும் படித்துள்ளது.


ஹிந்துத்வத்தின் தந்தை வினாயக தாமோதர சாவர்க்கரின் தலைமையில்  ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மஹா சபையின் உறுப்பினரான  நாதுராம் கோட்ஸே  உள்ளிட்ட சித்பவன பார்ப்பனக் கும்பல்தான் காந்தியடிகளை திட்டமிட்டு சுட்டுக் கொன்றது.

 

அந்தப் பாதக பழியின் ரத்த கவிச்சியை தங்களிலிருந்து கழுவித் துடைக்க முயல்வதின் எத்தனமே  ஃபாஸிஸ்டுகளின் ஆதாரங்களை அழித்தொழிக்கும் செயல்பாடு.

 

ஃபாஸிஸ்டுகளின் இலக்கிய முன்னெடுப்பாளரான ஜெயமோகனும் தனது இந்திய தத்துவ ஞான மரபுப்படி  ‘ காந்தியின் விருப்பம் கோட்ஸேயின் துப்பாக்கி வழியாக நிறைவேறியது” என இந்த படுகொலையை  ஊழாக விதியாக கர்ம வினையாக மாற்றி உரைக்கின்றார்.




 

அதை அப்படியே வழிமொழிகின்றனர் தமிழ்ச்சூழலில் உள்ள கள்ள காந்தியர்களும் ஆதிக்க வகுப்பினரும்.

 

“ காந்தி தற்கொலை செய்து கொண்டார்.”

 

“ஆன்மாவின் நிலையாத்தன்மையை பரிசோதித்தறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காந்தி தனது மார்புக்குள் மூன்று முறை கைத்துப்பாக்கியினால் சுடச்செய்தார்.”

 

“ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு சென்று தன்னை  எந்த வழியிலாவது  கொந்று விடும்படி  காந்தியே மன்றாடினார்.”

 

“கோட்சே பலூனை சுட்டு பயின்றுக் கொண்டிருக்கும்போது  மாலை நடை சென்றுக் கொண்டிருந்த காந்தி குறுக்கே சென்றதால் அந்த குண்டு அவரின் மார்பில் தற்செயலாக குறுக்கே பாய்ந்தது.”

 

ஜெயமோகன் பாணியில்  இது போன்ற தெளிவான அபவாதங்களை நாம் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

 

 

இந்த கள்ளக்களியின் கண்ணியை முறிக்க ஆய்வாளரும் எழுத்தாளருமான  கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்த ‘ காந்தி படுகொலை – பத்திரிக்கை பதிவுகள் ‘ என்ற ஆவணமானது  ஃபாஸிஸ எதிர்ப்பாளர்கள், மனித நேயர்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அறிவுக்கலன்.




--------------

 

நூலிலிருந்து…..           

 

“ …. காந்தியின் கொலையை நேர்டியாக விமர்சிக்காமல் , கொலைப்பாதகனை பழிக்காமல் ‘கல்கி ‘, ‘ சக்தி ‘ போன்ற இதழ்கள் பூசி மெழுகி பேசி இருந்தன. ஆனால் அண்ணா அதனை நேரடியாக கண்டித்திருக்கின்றார். அதற்கான தடயங்கள்தான் அவர் கட்டுரைகள்.

 

முற்கூறிய இரு இதழ்களும் கொலைச்செயலை மூடி மறைத்து விட்டு  வெறுமனே அண்ணலை  ஆராதிக்கும் தொனியில் ‘ மறக்க மாட்டோம் ‘ , ‘உங்களை இழந்து தவிக்கிறோம் ‘ என மென்மையாக கண்டித்திருப்பது  இன்றைய மறு வாசிப்புக்கு ஏற்கும்படியில்லை. அதன் உள் அரசியல் குறித்து  யோசிக்கத் தோன்றுகின்றது. இன்னும் இவர்கள் உரத்து உணர்ந்து பேசியிருக்க வேண்டும்,. வலு கொண்டு எதிர்த்திருக்க வேண்டும். அந்தக் காரியத்தை அண்ணா செய்தார்.

 

 

இவரின் ஆக்கங்களை ஒன்றுகூட்டி கொடுத்துள்ளேன். பல பத்திரிகைகளின்  ஒளி நகல் வடிவத்தை நூல் நெடுக விரவி விட்டுள்ளேன்…… “   .

-------------------

 

நூல் : காந்தி படுகொலை – பத்திரிக்கை பதிவுகள்

 

பதிப்பாசிரியர் : கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

 

விலை: ₹ 360/-

 

வெளியீடு: சந்தியா பதிப்பகம். தொலைபேசி: +914424896979, சென்னை- 600083

 

கிடைக்குமிடம்:  https://www.commonfolks.in/books/d/gandhi-padukolai-paththirikkai-pathivugla. செல்பேசி : +917550174762

No comments:

Post a Comment