தூர்தர்ஷன்
ஒளிக்களஞ்சியத்திலுள்ள சிறந்த குறும்படமொன்றை வலையொளியில் காண நேரிட்டது.
படத்தை வலையொளியில் காண கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்.
சத் கதி
படத்தை வலையொளியில் காண கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்.
சத் கதி
எல்லா மனிதர்களையும்
அவரவர் அன்னையர் சுதந்திரவான்களாக பெற்றிருக்க சாதிய மேட்டிமையால் இரக்கமின்றி சக மனிதனை சுரண்டிக் கொல்லும் ஒரு ஆதிக்க
மனத்தின் கதை. ஆதிக்க உளவியலின் பின்புல விசைகளை கேள்விள்ளாக்கும் ஆன்ம விசாரணைப்படமிது.
முன்ஷி பிரேம்
சந்த் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு 1981 ஆம் ஆண்டு சத்யஜித் ராயால் எடுக்கப்பட்ட
தொலைக்காட்சிக்கான ஹிந்தி குறும்படம் “ சத் கதி ‘ ( நற்பேறு ). ஓம்பூரி ஸ்மிதா பாட்டீல்
உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தில்
ஆங்கில துணைத்தலைப்புக்களுமிருப்பதால் மொழிச்சிக்கலின்றி காணவியலும்.
No comments:
Post a Comment