Saturday 29 February 2020

தில்லி படுகொலைகள் சொல்லும் செய்தி


குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக  நாடு முழுக்க போராடுவோரை இந்த படுகொலைகள் வாயிலாக  ஃபாஸிச அரசு அச்சுறுத்துகின்றது.
வன்முறையை நம் மீது திணித்து
அதே  வன்முறை வழியில் நம்மையும் இழுத்து விட முயலுகின்றார்கள்.பிறகு நம் மீது தீவிரவாத வன்முறையாளர்கள் முத்திரை குத்தி மேலும் நம்மை ஒடுக்க முயலுகின்றனர்.

தில்லி இன அழித்தொழிப்பில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோர் கும்பல் மனப்பான்மை அலையினால் உந்தப்பட்டவர்கள். தனிப்பட்ட முறையில் அவர்கள் மனசாட்சியுள்ளவர்கள். ஆர்.எஸ்.எஸ். ஃபாஸிச கும்பல் மிகச் சிறுபான்மையினர்தான். இவர்கள் பெரும்பான்மை சராசரி ஹிந்துக்களை வெறியேற்றி விட்டு விட்டு தாங்கள் தப்பி விடுவர்.

எனவே ஆர்.எஸ்.எஸ். கும்பலையும் சராசரி ஹிந்துக்களையும் நாம் வேறுபடுத்தி பார்த்து கையாள  வேண்டும்

எல்லா முனைகளிலும் மண்ணைக்கவ்வியுள்ள ஃபாஸிஸ பாஜக அரசு பெரும் பெரும் அழித்தொழிப்புகளை நடத்துவதன் வழியாகவும் CAA/NRC/NPR யை முன்னெடுப்பதின் வழியாகவும்தங்களின் தோல்விகளை மறைக்க முயலுகின்றது.
எனவே அதன் பொருளாதார தோல்விகள், ஊழல்கள், அயலுறவில் தோல்வி, உள் நாட்டு பாதுகாப்பு சீர்குலைவு, சாதி வெறி, ஆதிக்க வெறி, கூட்டாட்சிக்கு எதிரான அதன் நகர்வுகள், ஜிஎஸ்டி, செல்லாக்காசு விவகாரங்கள், பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவது, பெரு முதலாளிகளின் அடியாளாக செயல்படுவது , சிறு குறுந்தொழில் நசிவு என அனைத்தையும் குறித்து  நாம் சக இந்தியர்களுக்கு விழிப்புணர்வூட்டிக் கொண்டே இருத்தல்.

இந்தியர்களை மதத்தால் பிரித்து ஒருவருக்கெதிராக ஒருவரை நிறுத்தி போரிடச்செய்யும் ஃபாஸிஸ்டின் எல்லா பிளவு குயுக்திகளையும் உன்னிப்பாக உணர்ந்தறிவதோடு அந்த வலையிலும் விழாமல் நம்மை நாம் காத்துக் கொள்ளுதல்.

இது முஸ்லிம்களுக்கான பிரச்னை மட்டுமில்லை. அனைவரையும் ஒன்றன்பின்றாக சூழ்ந்து கரிக்கப்போகும் நெருப்பு இது என்பதையும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் சக குடிமக்களுக்கு  உணர்த்துதல்

 மதச்சார்பற்ற முற்போக்கு இடதுசாரி திராவிட மனிதநேய ஆற்றல்களோடு இணைந்து களமாடுதல்.

அரசு, வருவாய் துறை, காவல்துறை, நீதித்துறை பொறியமைப்பினருக்கும் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் மக்கள் தரப்பு நியாயங்களை விடாது சேர்த்துக் கொண்டே இருத்தல்.

வீதிக்கு கொலைவாளோடு வரும் சங்கி ஃபாஸிஸ்டுகளை அஞ்சாமல் எதிர்கொண்டு விரட்டுவதோடு இப்போதுள்ள நெருக்கடிகளுக்கு வன்முறை ஒருபோதும் தீர்வில்லை என்பதையும் புரிந்துக்கொள்ளுதல்.

அமைதியும் நிதானமும் அறிவுக்கூர்மையும் இழப்புகளை கண்டு நிலைகுலையாமையும்  மன உறுதியும் கூட்டு முயற்சியும் உரையாடலும் தொடர் போராட்டமும் சன நாயக சட்ட வழிமுறைகளுமே நம்முன் உள்ள ஒரே வழி என்பதை திடமாக நம்புதல்.





No comments:

Post a Comment