நகரத்தின் உதிரி வர்க்க சிறார்களின் உலகை சித்தரிக்கும்
1950 ஆம் ஆண்டின் ஸ்பானிய மொழித் திரைப்படம். திரையுலக பிதாமகர்களில் ஒருவரான லூயி
புனுவல் எழுதி இயக்கியது.
குடும்பத்தாலும் சமூகத்தாலும் கைவிடப்பட்ட அல்லது
சமூகத்தால் புரிந்து கொள்ளப்படாத மெக்ஸிகோ
நகரத்து சேரி சிறார்களின் இளம் மனிதர்களின் மனவுலகின் வழியாக மொத்த திரைப்படமும்
நகர்கின்றது.
பெற்றோர் பெயர் தெரியாத முரட்டு சிறுவன் எல்ஜைபோவின்
வாழ்வும் முடிவும் அவனது பிறப்பை போலவே மிகவும் கெடுவாய்ப்பாக அமைகின்றது. இறுதியில்
இறப்பானது ஒரு தாயைப்போல அவனை தன்னுள் வாரி சுருட்டிக் கொள்கின்றது.
அதி வேக நகரமயமாக்கத்திற்குள் பொருந்தவியலா மனிதர்கள்
உதிரிகளாக நகரத்தின் வாழ்க்கையின் ஓரங்களில் சுருட்டி எறியப்படுகின்றார்கள். கழிவு
பண்டங்களாக மாற்றப்பட்ட இந்த உதிரி மனிதர்கள் ஏதாவது ஒரு இரவும் பகலுமான நாளொன்றில்
குப்பையை போல ஒழித்துக் கட்டவும்படுகின்றார்கள்.
பெரும்பாலான நகரங்களின் வேர்களில்
இததகைய உதிரி மனிதர்களின் குருதியானது சாக்கடை நீர் போல பெருக்கெடுத்து கொண்டே இருக்கின்றது.
நகரமோ தனக்குரிய கள்ள பாவனைகளுடன் இயங்கிக் கொண்டே இருக்கின்றது.
No comments:
Post a Comment