நேற்றிரவு பைக்கில் வெளியே சென்றேன்.
பன்னீர் செம்பின் சரம் போல மழை இறங்கிக் கொண்டேயிருந்தது.
காற்றுக்குள் மழை இருந்ததனால் இதமான குளிர் குணத்துடன் வீசிக் கொண்டிருந்தது.
தெரு விளக்குகளின் ஒளிப்பொழிவானது முற்றிய நாட்டு வாழைப்பழம் போல கனிந்திருந்தது.
காரணம் அதற்குள் மழையிருந்தது.
பணி முடித்து வீடு திரும்பிய என் கண்ணில் கபீரின் இந்த வரிகள் . கண்ணில்
பட்டது. ஏனெனில் எனக்குள்ளும் மழை நிறைந்திருந்தது
கூடிக்கலந்தன
காதலூறிய மேகங்கள்
பொழிந்து தள்ளியது
மழை
மேனி நனைந்து
முழுவதும் ஈரமானது
ஆன்மா எங்கும்
பூத்துக்குலுங்குகிறது
பசுமை
No comments:
Post a Comment