"எறும்புகள்
பூஞ்சை விவசாயம் செய்கின்றன. அதோடு கால்நடைகளும் வளர்க்கின்றன " என சிலாகிக்கும்
விகடன் கட்டுரையின் வரிகள் புலன ( வட்ஸப் ) செய்தியில் வந்து விழுந்திருந்தது. இணைப்பை
சொடுக்கி வாசித்தேன் எறும்புகளை நம் கற்பனை வெளிகளுக்குள் அடங்காத மகா உயிரிகளாக தொடர்ந்து
வரைந்து செல்கிறது விகடன்.
"
" மனிதர்கள் செய்யும் அத்தனையையும் எறும்புகள் பல லட்சம் ஆண்டுகளாகச் செய்துவருகின்றன, ஒன்றைத் தவிர. எறும்புகள் நுகர்வுக் கலாசாரத்திற்கு அடிமையாகவில்லை. அது தற்சார்புப் பொருளாதாரம். அதோடு இன்னொன்றையும் எறும்புகள் செய்வதில்லை. எறும்புகள் சினிமா பார்ப்பதில்லை."
"
" மனிதர்கள் செய்யும் அத்தனையையும் எறும்புகள் பல லட்சம் ஆண்டுகளாகச் செய்துவருகின்றன, ஒன்றைத் தவிர. எறும்புகள் நுகர்வுக் கலாசாரத்திற்கு அடிமையாகவில்லை. அது தற்சார்புப் பொருளாதாரம். அதோடு இன்னொன்றையும் எறும்புகள் செய்வதில்லை. எறும்புகள் சினிமா பார்ப்பதில்லை."
என் வீட்டுத்தோட்ட சுவரில் சாய்த்திருக்கும் கம்பை கையிலெடுத்துக் கொண்டு
பழுத்த பப்பாளி பழங்களை அண்ணாந்தவாறே வலமும் இடமாக வசம் பார்ப்பேன். விழத்தட்ட வேண்டியவற்றை
கண்கள் குறித்துக் கொள்ள. கம்பால் பழத்தை அடியிலிருந்து உந்த அது தன் மொத்த உடலையும்
செம்பச்சை தலையாக உருவகித்துக் கொண்டு மண்ணில் தொம் என்ற மெல்லதிர்வோடு மோதி விழும்.
தெறித்த பாலில்
மண் தோய உருண்டு கிடக்கும் பழத்தை ஆசையாய் கையிலெடுத்து, நீருற்றியதன் பலாபலன் நினைவுகளோடு
உருட்டத் தொடங்கும்போது விரல்களின் சந்தியில் சுடுக்கென வலியெரிச்சலெடுக்கும் கடி
.
கடித்த எறும்பை
கண் பார்த்துக் கொண்டிருக்கவே கையிலிருந்து நழுவி பழம் தரைக்கு மீள , நான் குனிந்து
எடுப்பதற்குள் காலில் கடித்த வேகத்தில் செம்பந்தாய் சுருளும் எறும்பை தட்டியெறிந்தேன்.
அதற்குள் கொடுங்கையில் இரண்டு எறும்புகள் கடிப்பதற்கு வாகான இடத்தை தேட மொத்த உடம்பெங்கும்
எறும்புக்கு எதிரான அணிய நிலை பிரகடனம்.
விஷயம் என்னவென்றால்
பப்பாளி பழம் விழுந்த இடத்தில் மண் மறைவாக இருந்து எறும்பு புற்று இருந்திருக்கின்றது.
இருப்பிடம் சிதைந்த கோபத்தில் என் மீது எதிர்வினையாற்றியிருக்கின்றன அந்த ஊர்வன படை.
பப்பாளி மரத்தினருகில்
துளசிச் செடிகள் இரண்டினை நட்டிருந்தேன். . பேன் தொடங்கி பாம்பு வரை துளசியிருக்குமிடத்தில்
அண்டாதாமே? துளசி தீர்த்தம் மூளைத்தெளிவை கொடுக்குமாம். இவ்வளவையும் உத்தேசித்து ஆசையாய்
நட்டது. குப்பைமேட்டில் நின்றிருந்ததை இங்கு இடம் பெயரச்செய்திருந்தேன். செம்பு பாண்ட
குடிநீருக்குள் போடுவதற்காக துளசி இலைகளை பறிப்பதற்காக செடியை தொட்ட மறுகணம், கடித்தபடியே
என் கைமுழுக்க பரவியது எறும்புகள். உற்றுப் பார்த்தால் செடி முழுக்க ஊரும் எறும்பு
வரிசை. பேனையும் பாம்பையும் துரத்தும் துளசிக்கு எறும்பின் மீது எந்த ஆற்றலுமில்லை
என்பதை என் மூளை தெளிந்த வேளை.
கிட்டதட்ட தோட்டத்தின்
பாதி இடங்களில் மரம் வெறும் மண் என எறும்பின் கடிவெறி.
பலசரக்கு கடையிலிருந்து
வாங்கி வந்த எறும்பு பொடியை கையோடு தோட்டம் முழுக்க தூவினேன்.
மறுநாள் காலையில் தோட்டத்தில் ஓரிரண்டு கறுத்த எறும்புகளைத் தவிர மற்ற எதுவும் தென்படவில்லை.
மறுநாள் காலையில் தோட்டத்தில் ஓரிரண்டு கறுத்த எறும்புகளைத் தவிர மற்ற எதுவும் தென்படவில்லை.
விட்டு விட்டது
நம்மை என்ற நினைவு நிறைய நீரூற்றி விட்டு பப்பாளி மரத்தை சுற்றிலும் கரை கட்ட கரண்டியால்
மண்ணைக் கிளறினேன். செம்புள்ளி விரவலாய் மண்ணில் புரண்டன பாதாள வாச எறும்புகள். இம்முறை அவை சினிமா பார்க்காத வெறியில் கூட இருக்கலாம்.
No comments:
Post a Comment