முத்திரையிடப்பட்ட
குடிநீர் குடுவைகள். துவைத்து சலவையிடப்பட்ட துணிகள்( பயன்படுத்தியவை ) , உணவுக்கலன்
, புத்தகங்கள் என அந்த பேழைக்குள் அடுக்கப்பட்டிருந்தது.
கெடாத கைபடாத வீட்டில்
சமைத்த பாதுகாப்பான உணவை கொண்டு வைக்கலாம். தேவைக்கு கூடுதலாக இருக்கும் அல்லது புதியதாய்
வாங்கப்பட்ட ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள், பாத்திரங்கள் , இதர பயனுள்ள
பொருட்களை இந்த பேழைக்குள் இட்டு செல்லலாம்.
கொடுப்பவருக்கும்
வாங்குபவருக்கும் முகம் பார்க்க வேண்டிய தேவையில்லை. தாழ்வு உயர்வெண்ணங்களுக்கும் கீழ்மைகளுக்கும்
அங்கு இடமில்லை. தேவைக்கு மேல் உள்ளவற்றை சக மானுடனுடன் பகிர்ந்து கொள்ளும் கருணையின்
ஈரம் மட்டுமே எஞ்சியிருக்கும் மகா பாத்திரம்.
---- சென்னை ஆலந்தூர்
ரயில் நிலையச் சாலையில்....
No comments:
Post a Comment