Thursday, 12 September 2019

பழைய வீடு



இன்று காலை என் பழைய வீட்டிற்கு சென்றேன்.



மங்கலாக எரியும் விளக்கை போட்டவுடன் , பச்சை நிற சுவற்றில் என் மகள் எழுதிய " என் இனிய தாய் இல்லமே " என்ற விடைபெறும் குறிப்பு.


ஒழுங்குபடுத்துவதற்காக புத்தகப் பேழையை திறந்தேன்.


புத்தகங்களுடன் புத்தகங்களாக பழைய குடும்ப ஒளிப்படங்கள்.


தொட்டிலில் என் மூத்த மகன். நான் சிறுவயதில் விளையாடிய மகிழுந்து பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் மகனும் மகளும். ஜய்ப்பூர் பயண படங்கள்

வானஞ்சலில் வந்த இலங்கையின் கித்ல் கருப்பட்டி வட்டிலாப்பக் குறிப்புக்கள்

நம்மாழ்வார் அய்யா கையெழுத்திட்ட சான்றிதழ்

நானும் நண்பர் எஸ்.கே.ஸாலிஹும் இலங்கை வானொலியில் பங்கேற்ற நிகழ்ச்சியின் குறுந்தகடு.....

கூடத்திற்கு சென்றேன். காற்றின் வெம்மையில் கீறல் விழுந்த விதானம்

வெண் தூசி படிந்த ஏணிப்படிகள் வழியே மாடிக்கு சென்றேன். நிழல் தகடானது பாளம் விழுந்த முதியவரின் இலட்சணங்களோடு முழித்தது.

எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்ற அதன் தன்னிரக்க தன் மாய்ப்புக்குரிய உடல் மொழியின் கனத்தை தாங்க இயலவில்லை. வேகமாக மாடிக்கதவை பூட்டி விட்டு இறங்கி விட்டேன்.

No comments:

Post a Comment