இலங்கையில் நான் மாணிக்க வணிகம் புரிந்து கொண்டிருந்த காலமது. அப்படியான ஒரு பயணத்தில் என் உம்மாவிடமிருந்து கேள்வியொன்று எழுந்தது. விடையையும் கையுடன் கொண்டு வந்த கேள்வியது.
“நீங்கள்லாம்
சிலோன்ல போய் வாங்கீட்டு வர்றியளே கல்லு அது எங்கேந்து வந்தது தெரியுமா?”