Friday, 13 August 2021

ஒரு சொல்

அதிராம்பட்டினம்  பயணத்திற்கான துணிகளை இஸ்திரி போட்டு விட்டு சாப்பிட உட்கார்ந்ததில்  நிறைய தாமதமாகி விட்டது. மணி மூன்றாகி விட்டிருந்தது. வழக்கமாக வானொலியில் திருச்சிராப்பள்ளியிலிருந்து அஞ்சலாகும் மதியம் ஒன்றே முக்கால் மணிக்கான  மாநிலச்செய்தி தொடங்கவும் நான் சோற்றில் கை வைக்கவுமாக சரியாக இருக்கும்.