அந்திப் பொழுதின் மூன்று காட்சிகள்
காட்சி 1
மகனின் கை பிடித்து கடற்கரையின் வெண் மணல் பரப்பில் அந்த முதியவர் ஒரு
குழந்தைக்குரிய தடுமாற்ற நடையுடன் செல்கிறார். மகனின் வயது 43. தந்தையின் வயது 83.
அப்போது மேற்கு வானில் கதிரவன் மூழ்கிக் கொண்டிருந்தது.
காட்சி 2
இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன், படுக்கையில் கிடக்கும்
தன் வயதான தாயாரை நினைவு கூர்ந்தான், நான் உம்மாவிடம் இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான்
, அவள் தன்னை மகிழ்ச்சியிடம் முழுமையாக ஒப்படைக்கும் நேரம்.
காட்சி 3
சிறு கடி குடி கடையில் போய் அமர்ந்திருந்தேன். எனக்கு எதிரில் மிகவும்
பழக்கப்பட்ட அந்த முதியவரும் இருந்தார். அவருக்கு செவித்திறன் குறைவு. எனவே நான் சைகையிலேயே
அவருடன் உரையாடினேன்.
அவர் சொன்னவை , “ எனக்கு வயது 83 ஆகின்றது. மனைவி தவறி 4 வருடங்கள்
ஆகின்றன. குழந்தை குட்டிகளோ உடன் பிறந்தாரோ இல்லை. மனைவி வழி உறவினர் உணவளிக்கின்றார்.
தொலை உறவினரிடமிருந்து மாதம் ஆறாயிரம் ரூபாய்கள் கிடைக்கின்றது.
என்ன இருந்தாலும் மனைவியைப்போல வருமா ? பத்து நிமிடங்கள் கூட பசித்திருக்க
விட மாட்டாள். மனைவி இல்லாத வாழ்க்கை மிகவும் துயரமானது. இன்று என் வீட்டைப் பெருக்கக்
கூட ஆளில்லை. இறப்பை நான் கொண்டு வர முடியாதே. அதை இறைவன் தரும் வரைக்கும் காத்திருக்கத்தான்
வேண்டும்.
என்னைப் புரியாதவர்கள் எனது நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கின்றார்கள்
No comments:
Post a Comment