Wednesday, 26 November 2025

பித்தளைத்துட்டு

 

1

இரு பத்தாண்டுகளாக எனது தெருவில் பல இடங்களிலும் அவரைப்பார்த்திருக்கிறேன். உம்மா வாப்பா இட்ட பெயர் ஷேக் அப்துல் காதிர். ஒத்த வயதுக்காரர்களால் ‘சேத்துக்காரு’ என செல்லமாக அழைக்கப்படுபவர். ‘பித்தளைப்பூட்டு’ என்பதுதான்  அவரது விளிப்பெயராக இருந்திருக்க வேண்டும். அது ஏன் பித்தாளப்பூட்டாக திரிந்தது என்பதற்கு கூடுதல் விளக்கம் தேவைப்படாவிட்டாலும் அந்த பெயர் ஏன் வந்தது? என்பதற்கான விளக்கம் எனக்குத் தெரியாது. நானும் அதற்காக மெனக் கெடவுமில்லை.