எனக்கு தனிப்பட்ட முறையில் அட்டப்பாடி தொல்குடி பகுதிகளுக்கு
போவதென்பது கிட்டத்தட்ட பதினொரு ஆண்டு கனவு. முன்னணி ஆவணப்பட செயற்பாட்டாளரும் நண்பருமான
ஆர்.பி.அமுதன் சென்னையில் நடத்திய ஆவணப்பட விழாவில் The Red Data Book: An
Appendix என்றதொரு ஆவணப்படத்தை காண நேர்ந்தது. அதைப் பார்த்த பிறகு சில நாட்கள் மனத்தில்
சமநிலை இல்லை.
(காண்க: வாழ்வின் நிறம் கறுப்பு https://salaibasheer.blogspot.com/search?q=red+data).

